Advertisement

டில்லி ஓட்டலில் தீ: 17 பேர் பலி

புதுடில்லி: டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிர் இழந்தனர். பலர் மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பினர். தற்போது தீ கட்டுக்குள் வந்தது.

கடும் போராட்டம்டில்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் ஓட்டல் உள்ளது. இங்கு 150 க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், 28 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில், தூங்கி கொண்டிருந்த, பெண்கள், குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். தீயைணப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் காலை 8 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

35 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 3 பேரை காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர். தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை.

மோடி இரங்கல்இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: டில்லியின் கரோல் பாக் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. உறவினர்களை இழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

நிவாரணம்தீவிபத்து ஏற்பட்ட ஓட்டலை, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக்கூறினார். இந்த தீவிபத்து காரணமாக, டில்லியில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து நிறைவு பெறுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

திருப்பூரை சேர்ந்த இருவர் பலி:டில்லி தீ விபத்தில், தமிழகத்தின், திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிய, அரவிந்த், 38, நந்தகுமார், 32, ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள், நேற்று நடந்த ஒரு வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்க டில்லி சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும், 'ஆர்பிட் பிளேஸ்' தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இன்று பகல், 1:30 மணி விமானத்தில், சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தனர். அதற்குள், தீ விபத்தில் இருவரும் பலியாகினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  விதி மீறல் கட்டிடங்களுக்கு மின்சார கனெக்ஷன் எப்படி கோடிகளில் லஞ்சம் வாங்கி கொடுக்கப்படுகிறது? அதை கட் செய்தால்தான் அடங்குவார்கள்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  தீ நகரிலும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்க நூறு சதம் வாய்ப்பு உள்ளது. இப்போதும் அங்குள்ள பெரிய கடைகளில் படியெங்கும் சாமான்களை வைத்து வழியை அடைத்து இருக்கிறார்கள். ஏதாவது விபத்து என்றால் தப்பிக்க வழியே இல்லாமல் பலி நூற்றுக்கணக்கில் இருக்கும் என்றுதான் அச்சமாக இருக்கிறது.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  தி.நகர் விதி மீறல் கட்டிடங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கு. அவசரத்துக்கு தீயணைப்பு வாகனம் கூட நுழைய முடியாது. சீல் வைப்பதும், தடை வாங்கி திறப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  அடுக்கு மாடி கட்டிடங்கள் வெள்ளத்தை தவிர வேறு எதிலிருந்தும் பாதுகாப்பானது அல்ல... இனிமேல் இதுபோல் விபத்துகள் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது... எங்கப்பார்த்தாலும் 50, 60 மாடி கட்டிடங்கள் கட்டி விட்டுறாங்க... முன்பு ஆறு பேர் இருந்த குடும்பத்துக்கு எடுத்துக்கொண்டிருந்த தண்ணி இன்று நாற்பது பேருக்கு எடுக்கப்படுகிறது... மாநில அரசாங்கங்கள் நகரங்களை தவிர வேறு எங்கும் வசதிகள் பண்ணித்தரவில்லை, அதனால் மக்கள் அனைவரும் நகரத்திற்கு இடம் பெயர்ந்து தண்ணி, மாசு, சுகாதார பிரச்சனை அதிகமாகிவிட்டது... நாம் எங்கே போகிறோம் என்பது யாருக்கும் புரியவில்லை... இப்பொழுதே விழித்துக்கொண்டு ஒழுங்காக திட்டமிட வில்லையென்றால் வரும் சந்ததியினர் அதிக சிரமத்துக்கு உள்ளாக நேரிடும், இப்பொழுது டெல்லியில் நடப்பது போல்... பணத்தை மட்டும் சம்பாதித்து ஒன்றும் பலனில்லை.. அடுக்கு மாடி கட்டிடங்கள் தேவையில்லை...

 • ஆப்பு -

  டில்லி மட்டுமல்ல...இந்தியா முழுவதும் நெருக்கி, நெருக்கி கடிடங்கள் கட்டி எலிப்பொந்து வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். இதுல யாருக்கு எது நடந்தாலும் அதற்கு அவிங்களே பொறுப்பு.

Advertisement