Advertisement

பயங்கரவாதிகளுடன் மோதல்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

புல்வாமா: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மற்றொரு ராணுவ வீரர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மோதல்ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நமது வீரர்களும் பதிலடி கொடுக்க துவங்கினர்.

இந்த மோதலில், பல்ஜித் சிங் என்ற இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மற்றொரு ராணுவ வீரர் காயம் அடைந்து உள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • nicolethomson - bengalooru,இந்தியா

  மனசு வலிக்குது,

 • S B. RAVICHANDRAN -

  RIP

 • VIJAIAN C - ,

  Very sad news,his death should not go in vain,all terrorists responsible should be dealt with iron fist,may God grant peace to his soul and family

 • Gowri - Edison,யூ.எஸ்.ஏ

  May his soul rest in peace. Jaihind.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  அரசியல் கட்சிகள் பிரிவினைவாதங்களை தூண்டிவிடுவதால் வரும் வினைதான் இது போன்ற தாக்குதல்களுக்கு காரணம், வந்தே மாதரம்

 • kalyanasundaram - ottawa,கனடா

  khangrass and their supporters must be decimated since none of them are for self less service but live only for their families welfare and amass wealth

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  தமிழக ஏன் இந்திய பத்திரிக்கைகள் இது போன்ற செய்திகளை அதிகம் போடுவதில்லை...... மாறாக ரஜினி இட்லி சாப்பிட்டார், கமலஹாசன் புது கார் வாங்கியுள்ளார்,குஷ்பு குடும்ப தலைவியானார், விஜய்க்கு விரல் வீங்கியுள்ளது என போடுவது...

 • Pannadai Pandian - wuxi,சீனா

  நேரு ஒரு கம்யூனிஸ்ட். லி குவான் யூவும் ஒரு கம்யூனிஸ்டுதான். ஆனால் பின்னாளில் அவர் அறிந்து கொண்டது கம்யூனிஸ்ட் சிந்தாந்தத்தால் நாடும் மக்களும் புதை குழிக்கு செல்ல வேண்டியது என்பது தான் வளர்ச்சியை தருவது முதலாளித்துவம், திறமை தான் என்று முடிவெடுத்து சிங்கப்பூரை நல் பாதைக்கு எடுத்து சென்றார். ஆனால் ஏழைகள் நிறைந்த இந்தியாவில் சோசலிசம் பேசினால் தான் வாக்குகளை பொறுக்கலாம் என்று நேரு இந்தியாவை சுடுகாட்டுக்கு அனுப்பினார். அதனால் இந்தியர்கள் வறுமையிலும் பசியிலும் இதுகாலம் துவண்டார்கள். மோடி அவர் செய்த தவறை திருத்தி கொண்டிருக்கிறார். இது விஷயம் தெரிந்தவர்களுக்கு தெரியும், ஆனால் திராவிடம் பேசும் தமிழனுக்கு தெரியாது. நேரு என்பவரையும் அவரது குடும்பத்து அரசியலையும் துடைத்து அறியவேண்டியது இந்தியனின் தன்மானம்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  பூண்டு இந்தியாவின் பிற மாநிலங்களில் தான் இருக்கிறது

 • rajan. - kerala,இந்தியா

  பல சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பாகிஸ்தானுக்கு தேவை. இதில் அரசியல்சார்ந்த புல்லுருவிகளை முதலில் காலி பண்ணவேண்டும். குறிப்பாக காங்கிரஸ் கைக்கூலிகள் ஒழித்து கட்டப்பட வேண்டும். இந்தியாவின் பாதிப்பே இந்த எட்டாப்பங்களால் தானே.

 • kulandhai Kannan -

  காஷ்மீர் பிரச்சினையை படிக்கும்போதெல்லாம், நேருவின் சுயநலம்தான் வெளிப்படுகிறது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இவர்களை எல்லாம் பூண்டோடு அழிக்கவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement