Advertisement

ராஜஸ்தான் நில மோசடி வழக்கு : வாத்ரா இன்று ஆஜர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நில மோசடி வழக்கில், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, தன் தாயுடன் இன்று ஆஜராகிறார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்கு, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகானிரில், வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனம், 2015ல், மிகவும் குறைந்த விலையில், நிலங்களை வாங்கியுள்ளது. பின், அதிக விலைக்கு, அந்த நிலம், ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி, மூன்று முறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், வாத்ரா ஆஜராகவில்லை. 'இந்த வழக்கில், வாத்ராவும் அவரது தாய், மவ்ரீனும், அமலாக்க துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.


அதன்படி, ஜெயப்பூரில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், வாத்ரா மற்றும் அவரது தாய் மவ்ரீன் இன்று ஆஜராக உள்ளனர்.


முன்னதாக, வெளிநாடுகளில் சொத்து வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக, வாத்ராவிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள், சமீபத்தில், மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எல்லா மாநிலத்திலேயும் அரசாங்க நிலத்தை ஆட்டையை போட்டு விற்றிருக்கிறான். கொஞ்சம் விட்டிருந்தால் இந்தியாவையே பிளாட் போட்டு விற்றிருப்பான்.

 • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

  காங்கிரஸ்காரர்கள் தான் கில்லாடி என்று நினைத்தால் ஊழல் செய்வதில் நாட்டை கொள்ளை அடிப்பதில் மதக்கலவரம் உண்டாக்குவதில் குண்டுவெடிப்பு கலாச்சாரங்களில் கில்லாடிகள் ஆனால் இங்கே கருத்து எழுதும் காங்கிரஸ் அல்லக்கைகள் 17 வருடங்களுக்குப் பிறகு பிளாட் விலையை பற்றி கட்டிட விலையை பற்றி எவனாவது வருவானா அவ்வளவு பித்தலாட்டமான கருத்துக்களை பதிவு செய்வது இவர்களெல்லாம் காங்கிரசில் ஒரு வழியாக மந்திரி பதவி கிடைத்தால் அடுத்த நாட்டுக்கு கூட்டிக் கொடுத்து விட்டு போய் விடுவார்கள் இங்கு இருக்கும் நல்லவர்களுக்கு மிகவும் சோதனையான காலம்தான் இந்த காங்கிரஸ் அல்லக்கைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியில் என்னதான் நல்லது நடந்தது தெரியவில்லை இவர்களுக்கு இறைவன் தான் நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் வாழ்க தாய்நாடு

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  திருட்டு பயல்கள் விசாரணைக்கு ஆஜராக கூட நீதிமன்றம் உத்தரவு போட வேண்டி இருக்கிறது. ஏனென்றால் பணம், அதிகார திமிர். என்று இந்த நாட்டின் சட்டம் அனைவர்க்கும் சமமாக செயல்படுகிறதோ அன்று தான் இந்த நாட்டிக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம்.

 • Rajan - chennai,இந்தியா

  முடிந்தால் அவரை ஜெயிலில் அடைக்கவும்...இதை பா ஜ அரசுக்கு சவாலாக விடுகிறேன்....முடியாது...பேமிலி பேக் என்ற சுறாமீன் வாங்கியுள்ளார்கள்....

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  விசாரணை நடத்துறதெல்லாம் இருக்கட்டும் .. உங்களால ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா சொல்லுங்கள் .. அந்த நாளை எதிர்பார்க்கிறேன் ..

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   முடியாது. அவர்களுக்கு ஜாமீன் / பெயில் கொடுக்க தான் நீதிபதிகள் இருக்கிறார்கள்.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  ஒரு இடத்தை குறைந்த இடத்துக்கு வாங்கி அதிக இடத்துக்கு விற்பதில் என்ன குற்றம் கண்டார்கள் ? விளக்குங்களேன் ப்ளீஸ்

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  அய்யா புகழ் அவர்களே உங்க பிளாட் ஓனர்போல ஏமாற இவர் முட்டாள் அல்லவே... சோனியாவின் மருமகன் .....

 • tamil - coonoor,இந்தியா

  இன்றுடன் அவர் தொடர்ந்து ஐந்தாவது தடவையாக அமலாக்கத்துறையினரிடம் ஆஜர் ஆகி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார், தவறு செய்திருந்தால், தாராளமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க யாரும் தடை போட முடியாது, ஒரு மிரட்டலுக்காக இருந்துவிடக்கூடாது,

  • VIJAIAN C - ,

   He was summoned 3 times for this case by ED and he didnt appear,finally as per Rajasthan Court order he is appearing!!!!

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பின்னால் இருப்பவர்கள் துணிச்சலில் இருக்கின்றார்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  பொண்டாட்டி அரசியல் செய்வதே இவனை காப்பாற்றத்தான். வரும் தேர்தலில் மோடி மீண்டும் ஜெயித்தவுடன் இவனுக்கு கண்டிப்பாக ஜெயில்தான்

  • pattikkaattaan - Muscat,ஓமன்

   ஏன் இப்பவே ஜெயில்ல போட்டிருக்க வேண்டியதுதானே ?..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பொறாமைப்பட்டு பயனில்லை. எங்கள் எதிர் ப்ளாட்டில் ஒரே தகராறு. இப்போதைய ஓனர் 2001இல் ஒரு சென்ட் 1.5 லட்சம் குடுத்து வாங்கினாராம். போன வருடம் அதை ஒரு சென்ட் 16 லட்சம் மேனிக்கு விற்க அக்ரிமெண்ட் போட்டாச்சு. ஆனால் பழைய ஓனர் வந்து, "என்னை ஏமாற்றி கம்மி விலையில் புடுங்கிக்கிட்டார் என்று கேஸ் ஃபைல் பண்ணியிருக்கார் போல.. இப்போதைய ஓனர் அப்பிராணி..பாவம். என்ன செய்வது என்று பயந்து கிடக்கிறார்.

  • VIJAIAN C - ,

   Robert has purchased property for under value 72 lakhs in 2010 and sold it at 6 crores in 2012 without doing any construction or anything on the land,if you can tell me how to this business I will quit my job and start this business,this same technique was used by Azhagiri during 2006 to 2011 during kalaigar rule!!!!

  • Pannadai Pandian - wuxi,சீனா

   With political power, they twist common people's arms. This is just the copy of what DMK was doing during 2006-2011 misrule. Now all corrupt elements joined together to oppose Modi. The prime reason is that these political parties like congress, dmk, akilesh, mayavathi is to loot the nation again as during the period of 2004-2014. Modi is the stumbling block for their greediness.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  டெல்லியில அமலாக்கத்துறை விசாரணை முடிந்தவுடன் ஹார்லி டேவிட்சன் பைக்குல பய புள்ள ஊரை சுத்தி வருது ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement