Advertisement

இன்று ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா தாக்கல்

புதுடில்லி: சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் இம்மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடக்கிறது.
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும், திருத்த மசோதா, 2016ல், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் லோக்சபாவில் நிறைவேறியது.இந்த மசோதாவுக்கு அசாமில் மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதற்காக தாக்கல் செய்யப்படுகிறது.மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தாக்கல்செய்து உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விவாதம் நடக்கிறது.இந்த மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்துள்ள, அங்கு சிறுபான்மையினராக இருந்த, ஹிந்து, சீக்கிய, ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.இதற்காக, 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை, ஆறு ஆண்டுகளாக குறைப்பதாக, திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • rmr - chennai,இந்தியா

    இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஏன் கொடுப்பதில்லை ? வங்காளதேசம் பர்மா போன்றவற்றில் இருந்து வந்த ,முஸ்லிம்களுக்கு எதுக்கு கொடுக்கிறிங்க?

  • அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா

    இதில் என்ன கஷ்டம் இந்தியாவில் வாழுபவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட இருக்கிறது,இதில் என்ன போராட்டம் வேண்டிக்கிடக்கிறது,12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இல்லை,6 ஆண்டுகளில் குடியுரிமை வழங்க இருக்கிறார்கள்,இதில் அரசியல் கட்சிகளுக்கு என்ன கஷ்டம்.தேவை இல்லாமல் அரசியல் ஆதாயம் கருதாமல் இதை ஆதரிப்பதை விட்டு விட்டு எப்போதும் போல மம்தா,ஸ்டாலின் போன்றோர் எதிர்ப்பதை நிறுத்தலாம்

  • kmathivanan - Trichy ,இந்தியா

    மிகவும் வரவேற்க வேண்டிய மசோதா, ஏனெனில் ஆப்கான், பாக்கிஸ்தான் , பங்களாதேஷினுள் நம் இந்து மக்கள் கட்டாய, வன்முறை மூலம் மதமாற்றம் செயப்படுகிறர்கள், அவர்களை காப்பது நமது கடமை, 20 சதவீதம் இருந்த ஹிந்து மக்கள் இப்பொழுது 4 சதவீதத்திற்கும் கீழ் உள்ளனர்

  • Vijay - Chennai,இந்தியா

    குடியுரிமை மசோதாவை கடுமையாக எதிர்க்கு திமுக, மம்தா, கம்யூனிஸ்ட் மற்றும் ராகுல் ராஜீவ். இந்த மசோதா சொல்வது என்ன? வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் போன்ற நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை தருவதென்று இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

  • makkal neethi - sel,இந்தியா

    தேர்தல் விளம்பரம்

Advertisement