Advertisement

அவலம்! அரசு மருத்துவமனையில் கண்ட இடங்களில் 'பார்க்கிங்'.. இருக்கை இன்றி பரிதவிக்கும் பார்வையாளர்கள்

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் நினைத்த இடங்களில் குறிப்பாக பார்வையாளர் ஓய்வெடுக்கும் பகுதிகளில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் இருக்கைகள் இன்றி ஆங்காங்கே உட்கார்ந்து ஓய்வெடுத்தும், சமையல் அறை கூடம் பகுதியில் வெட்டவெளியில் உணவு சாப்பிட்டும் மக்கள் அவஸ்தைபடுகின்றனர்.இம்மருத்துவமனை உள் வளாகங்கள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பார்வையாளர்களின் ஓய்வெடுக்கும் இருப்பிடமாக மாற்றப்பட்டு வருகிறது. டீன் அறை அருகே பால்வினை தொற்று வார்டு 110 க்கு எதிரே உள்ள உள் வளாகத்தை ஊழியர்கள் சிலர் தங்களின் டூவீலர்களை நிறுத்தும் பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழித்தடத்தில் அடிக்கடி நோயாளிகளை ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லும் போது, அடிக்கடி ஊழியர்கள் டூவீலர்களில் வருவதால் விபத்து அபாயம் உள்ளது.வேறுவழியின்றி உள் நோயாளிகளை காண வரும் உறவினர்கள், பார்வையாளர்கள் சமையல் கூடம் பகுதியில் தஞ்சமடைந்து வருகின்றனர். மிச்சமாகும் உணவு கழிவுகளை கால்வாயில் கொட்டுவதால் அடைப்பு ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ஊழியர்களின் வாகனங்களை பாதுகாப்புடன் நிறுத்த இட வசதி செய்தும், அந்த இடத்தை பார்வையாளர்கள் இருப்பிடமாக மாற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • nicolethomson - bengalooru,இந்தியா

    ஊழியர்களுக்கு கூட புத்தி இல்லையா?

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டி பின் வசூல் செய்துகொள்ளலாம்

Advertisement