Advertisement

சிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி

புதுடில்லி,:'மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில், சிறுபான்மையினர் யார் என்பதை நிர்ணயிக்க வேண்டும்' என, டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான, அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்திருந்தார்.ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்து, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் முறையிடும்படி, உச்ச நீதிமன்றம் கூறியது.

புதிய மனுஇந்நிலையில், அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில், அவர் கூறியுள்ளதாவது:கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், ஹிந்துக்கள், சிறுபான்மையினராக உள்ளனர்.ஆனால், சிறுபான்மையினர் பிரிவில், ஹிந்துக்கள் இல்லாததால், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில், சிறுபான்மையினருக்கான வசதிகளை, ஹிந்துக்கள் பெற முடியவில்லை.சிறுபான்மையினர் குறித்து தேசிய அளவில் கணக்கெடுக்காமல், மாநிலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்காக, சிறுபான்மையினர் குறித்த விளக்கத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

உத்தரவுமேலும் சிறுபான்மையினருக்கான அந்தஸ்தை நிர்ணயிக்க வழிமுறைகளில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும் படி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (142)

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  நாதிர்ஷாவும் கஜினியும் பாபரும் அலாவுதீன் கில்ஜியும் தான் இந்த நாட்டு மன்னர்கள், அவர்கள் வழி வந்தவர்கள் தான் உண்மையிலேயே இந்நாட்டு குடி மக்கள். மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  உண்மையிலேயே பிராமணர்கள் தான் சிறுபான்மையினர் .இதை எல்லா புள்ளி விபரங்களும் கூறும். விரைவில் நீதிமன்றங்கள் அவர்களை சிறுபான்மையினராக அறிவித்து எல்லா விதமான ஒதுக்கீடுகளை கல்லூரிகளிலும் சலுகைகளில் பதவி உயர்வு செய்யவும் வேண்டும். மிக அவசியமான நடவடிக்கை.

 • மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சிறுபான்மை என்ற சொல் நீக்கப்படவேண்டும். அரசு அனைவருக்கும் பொதுவானதாக மாறியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் கடந்து விட்டன சுதந்திரம் பெற்று. இன்னமும் என்ன சலுகைகள். அறிவிற்கும் திறமைக்கும் தடை கூடாது. ஏழைகளுக்கு உணவிற்கும் உடைக்கும் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இலவச வசதிகள் செய்து கொடுக்கட்டும், அதை சிறுபான்மை என்று கொள்ளக்கூடாது.

 • Vasu - Coimbatore,இந்தியா

  // Rahim Gani - மொகலாயர்கள் தான் இந்தியாவை கட்டுமானத்திலும் அடிப்படை வசதிகளிலும் முன்னேற செய்தனர், பல நாடுகளில் போரிட்டு வென்ற பொக்கிஷங்களை எல்லாம் இதே ஹிந்துஸ்தானத்தில் தான் கொண்டு வந்து எண்ணற்ற மக்கள் நல திட்டங்களையும் அழியா செல்வங்களான செங்கோட்டை, தாஜ்மகால், குதுப்மினார், ராஷ்ட்ரபதி பவன் போன்ற செல்வங்களை ஏற்படுத்தினார்கள் // உலக வரலாற்றாளர்களே Rahim Gani அறிவின் முத்துக்களை உதிர்கிறார் நீங்கள் குறிப்புகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள், முகலாய மன்னர்கள் தாங்கள் வசதியாக வாழ, ஏழாவது மனைவியின் நினைவாக (கொள்ளையடித்து) கட்டிக்கொண்ட கோட்டைகளெல்லாம் மக்களுக்காக ஏற்படுத்திய செல்வங்களாம், அப்படியே முகலாயர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் போரிட்டு வென்று செல்வங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள் என்று Rahim Gani நமக்கு விளக்கினார் என்றால் வரும் தலைமுறை படித்து தெரிந்து கொள்ள வசதியா இருக்கும். ரஹீம் கனிக்கு நான் ஒரு தகவலை கூறிக்கொள்ள விரும்புகிறேன், முகலாயர்கள் இந்தியாவிற்கு வரும்முன் உலகளவில் இந்தியாவின் GDPயின் பங்கு 27 % , முகலாயர்கள் வந்தபின் 23 %, இதை உங்கள் நண்பர் சசி தரூர் எழுதிய "An Era of Darkness " படித்தால் தெரிந்து கொள்ளலாம். நல்லவேளை முகலாயர்களை வேட்டை ஆட மராட்டிய சிங்கம் சிவாஜி பிறந்தார் இல்லையென்றால் தென்னகம் வரை வேரூன்றி நாட்டை சீரழித்திருப்பார்கள்.

 • Vasu - Coimbatore,இந்தியா

  சிறுபான்மை இனத்துக்கு அப்படி என்ன சலுகை செய்தீர்கள் என்று ஒரு மட்டை கேட்கிறது, சிறுபான்மைகளுக்கு அரசாங்க வேலையில் முன்னுரிமை, நீங்கள் ஆரம்பிக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு அரசாங்க நிதி உதவி, நீங்கள் மெக்கா செல்ல சலுகை விலையில் ஏர் இந்தியா டிக்கெட், உங்களுடைய சிறுபான்மை அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணத்திற்கு குறைத்த நடைமுறை சிக்கல்கள் மேலும் அதன் செலவு கணக்கு கட்டுவதில் சலுகை என பல சலுகைகளை அனுபவித்துவிட்டு சிறுபான்மை இனத்துக்கு அப்படி என்ன சலுகை செய்தீர்கள் என்று ஒரு மட்டை கேட்கிறது. உலகத்தின் முதல் மற்றும் இரண்டாவது மதத்திற்கு இந்தியாவில் சிறுபான்மை சலுகைகள், கேவலம். இவர்கள் அனுபவித்தது போதாது என்று ரோகிங்கியாக்களை, பங்காளதேசிகளை வேறு இங்கு குடியேற்ற வேண்டுமாம்... சும்மா வளவள கொழகொழ என்று பேசாமல், பொது சிவில் சட்டத்தை கொண்டுவாருங்கள், மேலும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்றும் சீனா காரன் போல் ஒரு சட்டம் இயற்றுங்கள்...

Advertisement