Advertisement

அபுதாபியில் ஹிந்து கோவில்!


துபாய் : வளைகுடா நாடுகளில் ஒன்றான, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரசு எமிரேட்சின் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கான, அடிக்கல், வரும், ஏப்., 20ல் நாட்டப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, 2015ல் சுற்றுப்பயணம் செய்தபோது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அபுதாபியில், 13.5 ஏக்கர் நிலப்பரப்பில், பி.ஏ.பி.எஸ்., சுவாமிநாராயண் சன்ஸ்தா என்ற சர்வதேச ஹிந்து மத அமைப்பின் மூலம், இந்தக் கோவில் கட்டப்பட உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அது வைர வியாபாரிகளாக படேல் சமூகத்தார் கோவில் சுவாமி நாராயண் என்னும் சன்யாசி தான் மூலவர் எல்லாம் சலவைக்கல்லில் இழைத்தெடுப்பார்கள் பலஆயிரம் கோடி செலவுசெய்வார்கள் கலைநயம் மிளிரும் அமெரிக்காவில் New Jersey மற்றும் அடிலாண்டாவில் பார்த்திருக்கிறேன் மிக பிரமாண்டமாக இருக்கும் பிரமிப்பு உண்டு ஆனால் பக்திவராது

  • TamilArasan - Nellai,இந்தியா

    அரபு நாடுகள் எல்லாம் மத சகிப்புத்தன்மை என்ற உலக சிந்தனைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் காலம் காலமாய் சாமி ஊர்வலம் போன நம் வீதிகளில் புதிதாய் மசூதிகளை கட்டிவைத்துவிட்டு இன்று எங்கள் தெரு வழியாய் இந்துக்கள் சாமி ஊர்வலம் கொண்டு செல்லக்கூடாது என்று இங்கு உள்ள இலாமியர்கள் அராஜகம் செய்கிறார்கள்...

    • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

      அத சொல்லுங்க.

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

    சுவாமி நாராயண் கோவில் தனி மனித வழிபாடு கோவில். அங்க சாமின்னு கும்பிடறது ஒரு 1700 ல் வாழ்ந்த ஒரு மனுசனத்தான். சிவன் ராதா கிருஷ்ணர் ராமர் எல்லாம் இருக்கும் ஆனா முக்கிய மூலவர் அந்த சுவாமி நாராயண் தான்.

    • TamilArasan - Nellai,இந்தியா

      அதுக்கு என்னப்பா...? "சிவன் ராதா கிருஷ்ணர் ராமர் எல்லாம் இருக்கும்..." அது போதாதா...? மனுஷனை வணங்க பிடிக்கலை என்றால் நீ சாமியை வாங்கி வா... நம் ஊரிலும் பெரும்பாலான கோவில்களில் சித்தர்களுக்கு சமாதி உள்ளது வணங்குவதும் வணங்காததும் அவர் அவர் விருப்பம்...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இதுவும் ஒரு மத நல்லிணக்கத்தின் முதல் படி...

    • Nalam Virumbi - Chennai,இந்தியா

      எங்கும் மத நல்லிணக்கம் வேண்டியதுதான். ஆனால் மத மாற்றமும், தேர்தல் பிரச்சாரம் போல் மதப் பிரச்சாரமும் கூடாது. அவரவர்கள் நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தங்கள் மதத்தை அனுசரிக்கவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement