Advertisement

வி.சி., வழக்கறிஞர் வெட்டி கொலை

சோழவரம்:சோழவரம் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளரை வெட்டி, கொலை செய்த, ஐந்து பேர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.சோழவரம் அடுத்த, சிவந்தி ஆதித்தன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 47: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வந்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, கடைக்குச் சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தார்.வீட்டின் அருகில் செல்லும்போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், சுரேஷ்குமாரை, முகம், கால், கை உள்ளிட்ட இடங்களில், சரமாரியாக வெட்டி தப்பினர். ரத்த வெள்ளத்தில், சுரேஷ்குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார்.சோழவரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சுரேஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.சுரேஷ்குமாரை கொலை செய்தோரை, போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று மாலை, சோழவரம், காந்தி நகரைச் சேர்ந்த மாரியப்பன், 47, உள்ளிட்ட, ஐந்து பேர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.குடும்ப பிரச்னை தொடர்பாக, மாரியப்பன் குடும்பத்தினர், சுரேஷ்குமாரை கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement