Advertisement

அதிகாரி வீட்டில் திருடிய கணவன் - மனைவி கைது 

தாம்பரம்:விமானப்படை அதிகாரி வீட்டில் திருடிய, கணவன் -- மனைவியை, சேலையூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.தாம்பரம், விமானப்படை தளத்தில், 'பைலட்' ஆக பணிபுரிந்து வருபவர், உமாங் நாட்டியால், 32. அவரது, மனைவி மேரிகா மண்டா, 29. இருவரும், இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றனர்.இவரது வீட்டில், பல்லாவரத்தைச் சேர்ந்த, சதீஷ், 29, மற்றும் அவரது மனைவி சுகன்யா, 26, ஆகிய இருவரும் தங்கி, வீட்டு வேலை செய்து வந்தனர்.இந்நிலையில், உமாங் நாட்டியால், மனைவியுடன், பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றனர். ஜன., 17ல் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பீரோவில் இருந்த, 10 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன.இதையடுத்து, உமாங் நாட்டியால், சேலையூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர், விஜயரங்கன் தலைமையிலான போலீசார், விசாரணை நடத்தினர்.அதில், சதீஷ், சுகன்யா, நகை திருட்டில் ஈடுபட்டு, தலைமறைவானது தெரிந்தது. அவர்கள் இருவரையும், நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், நகைகளை பறிமுதல் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement