Advertisement

ஹரியானா கூலிப்படை துப்பாக்கி முனையில் கைது

சென்னை:சென்னை, மாதவரத்தில் பதுங்கி இருந்த, ஹரியானா மாநிலம் கூலிப்படையினர், ஆறு பேரை, உள்ளூர் போலீசார் உதவியுடன், அம்மாநில போலீசார், துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.சென்னை, மாதவரம், புக்ராஜ் நகரில், கூலித் தொழிலாளிகளாக தங்கி, வடமாநிலத்தவர்கள் சிலர், செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த நபர்களின் நடவடிக்கையை, மாதவரம் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். சில தினங்களுக்கு முன், ஹரியானா, டி.ஐ.ஜி.,யான, தமிழகத்தைச் சேர்ந்த, சதீஷ் பாலன், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.அவர், 'ஹரியானா மாநிலத்தில், கொலை, ஆள்கடத்தல், இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்தது உட்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும், வட மாநில கூலிப்படையினர், மாதவரத்தில் பதுங்கி உள்ளனர்' என, தெரிவித்தார்.இதையடுத்து, இரு தினங்களுக்கு முன், ஐந்துக்கும் மேற்பட்ட போலீசாருடன், டி.ஐ.ஜி., சதீஷ் பாலன், சென்னை வந்தார். அவர்களுக்கு உதவி செய்ய, வடசென்னையில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள், பணியமர்த்தப்பட்டனர்.அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, மாதவரம் புக்ராஜ் நகரில், அடுத்தடுத்த வீடுகளில் தங்கி இருந்த, வடமாநில கூலிப்படையினர் ஆறு பேரை, துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர்.விசாரணையில், அவர்கள், டில்லியைச் சேர்ந்த, ராகுல் சிங், 26, ஹரியானாவைச் சேர்ந்த, மதன் சர்மா, 35, அனில், 27, சந்தீப், 29, சுபாஷ், 28, ராஜஸ்தானைச் சேர்ந்த, சுமீத், 27, என்பது தெரியவந்தது.இந்த ஆறு பேரையும், சாத்தாங்காடு மற்றும் மாதவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று, ஹரியானா மாநில போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.அவர்களை விமானத்தில், ஹரியானா அழைத்துச் செல்ல, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement