Advertisement

தொழில்முறை வல்லுனர் பதிவு சி.எம்.டி.ஏ.,வில் துவக்கம்

- நமது நிருபர் -தமிழக அரசு அறிவித்துள்ள, பொது கட்டட விதிகளின் அடிப்படையில், பொறியாளர்கள், நகரமைப்பு வல்லுனர்கள் உள்ளிட்ட, தொழில்முறை வல்லுனர்களை பதிவு செய்யும் பணிகளை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.தமிழகத்தில், ஊராட்சி முதல் மாநகராட்சி வரை, அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கும், பொதுவான கட்டட விதிகள், பிப்., 4ல் அறிவிக்கப்பட்டன. இதன்படி, கட்டுமான திட்ட பணிகளில், முறையான தொழில்முறை வல்லுனர்கள் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கட்டட பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், கட்டட அமைப்பியல் பொறியாளர்கள், நகரமைப்பு வல்லுனர்கள் உள்ளிட்ட, எட்டு வகையான தொழில்முறை வல்லுனர்கள் பங்கேற்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களை பதிவு செய்து, சான்றிதழ் அளிக்கும் அதிகாரம், சி.எம்.டி.ஏ.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பதிவு செய்து கொள்வோர், புதிய கட்டுமான திட்டங்களுக்கு, அனுமதி அளிக்கப்படும் நிலையில் இருந்து, கட்டுமான பணியின் ஒவ்வொரு நிலையிலும், சரிபார்ப்பு, சான்றளிப்பது ஆகிய பொறுப்புகளை ஏற்க வேண்டும். இதற்கான பதிவு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.இதற்கான மாதிரி படிவங்கள், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement