கரை ஒதுங்கிய ஓட்டுனரின் சடலம்
திருவொற்றியூர்:'மினி' வேன் ஓட்டுனரின் சடலம், என்.டி.ஓ., குப்பம் கடற்கரையில் ஒதுங்கியது.தண்டையார்பேட்டை, திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர், பிரதீஷ், 34; மினி வேன் ஓட்டுனர். அவர் மனைவி, சுகன்யா. இவர்களுக்கு, இரு பிள்ளைகள் உள்ளனர்.நேற்று மதியம், எண்ணுாரில் உள்ள, நண்பர்களை பார்க்க சென்ற பிரதீஷ், திரும்பி வரவில்லை. இந்நிலையில், மாலையில், திருவொற்றியூர், என்.டி.ஓ., குப்பம் கடற்கரையில், அவரது சடலம் கரை ஒதுங்கியது.திருவொற்றியூர் போலீசார், உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!