Advertisement

சிறுமியரிடம் சில்மிஷம் இருவர் மீது, 'போக்சோ'

- நமது நிருபர் குழு -சென்னையில், வெவ்வேறு இடங்களில் நடந்த, சிறுமியர் பலாத்கார சம்பவங்களில், இருவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.சென்னை, கே.கே.நகர், 100 அடி சாலையை சேர்ந்த, 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள, அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 8ம் தேதி, அவரது பெற்றோர், வேலைக்கு சென்றதால், சிறுமி மட்டும், வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த, பிரகாஷ், 19, மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர், சிறுமியின் வீட்டிற்குள்ளே நுழைந்து, பலாத்காரம் செய்துள்ளனர்.இது குறித்து, அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, பிரகாஷ், சிறுவன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவன், கார்த்திகேயன், 21; ஆட்டோ ஓட்டுனர். இவன், நீலாங்கரையைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை, கடலுாருக்கு கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். சிறுமியின் பெற்றோரின் புகாரின்படி, சாஸ்திரி நகர் போலீசார், நேற்று முன்தினம் மாலை, கடலுார் சென்று, சிறுவர்களை பாலியல் குற்றங்களில் இருந்து காப்பாற்றும், 'போக்சோ' சட்டத்தில், கார்த்திகேயனை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.சைதாப்பேட்டையைச் சேர்ந்தவன், ராஜா, 50; உயர் நீதிமன்றத்தில், கார் ஓட்டுனராக பணிபுரிகிறான். இவனுக்கு, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவன், நேற்று முன்தினம், அதே பகுதியைச்சேர்ந்த, 10 வயது சிறுமியிடம், சில்மிஷம் செய்துள்ளான். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி நேற்று, சைதாப்பேட்டை போலீசார், 'போக்சோ' சட்டத்தில், ராஜாவை கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement