Advertisement

கழிவுநீர் முகாம் ரூ.12.8 லட்சம் வருவாய்

மாதவரம்:மாதவரத்தில் நடந்த கழிவுநீர் இணைப்பு முகாமில், 12.8 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.சென்னை, மாதவரம் மண்டலம், 24, 25, 26, 32வது வார்டுகளின், புத்தகரம், விநாயகபுரம், லட்சுமிபுரம், சூரப்பட்டு பகுதிகளில், கழிவுநீர் கால்வாய் இணைப்புக்கான, குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தன.கட்டட உரிமையாளர்கள், அதற்கான இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம், மாதவரம், பெருமாள் கோவில் தெருவில் உள்ள, குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடந்தது. நேற்று காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை நடந்த இம்முகாமில், 107 பேர் இணைப்பு கோரி, விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.இதில், 57 பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். 49 பேர், இணைப்புக்கான கட்டணத்தை, ரொக்கமாக செலுத்தினர். அந்த வகையில், 10 லட்சம் ரூபாயும், நிலுவையில் இருந்த வரிகள் செலுத்தியதன் மூலம், 2.8 லட்சம் ரூபாயும், குடிநீர் வாரியத்திற்கு, வருவாயாக கிடைத்தது.மேலும், 200க்கும் அதிகமானோர், விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். அவர்கள், வரும் நாட்களில், இணைப்பிற்கான கட்டணத்தை செலுத்தலாம்.ஆன்லைன் பதிவு மற்றும் இணைப்புக்கான கட்டணம் செலுத்துவது எளிதானது. தேவையற்ற அலைச்சலும் இல்லை. மேலும், இடைத்தரகர்கள் மூலம், நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் செலவு மற்றும் பணம் இழப்பு ஏமாற்றம் ஆகியவற்றை தவிர்க்கலாம். விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது, வரி நிலுவை இருந்தால், இங்குள்ள அலுவலகத்தில் செலுத்தி, விரைவான சேவையை பெறலாம்.சென்னை குடிநீர் வாரிய அதிகாரி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement