Advertisement

ஆடியோ விவகாரம்: விசாரணைக்குழு அமைக்க குமாரசாமி உத்தரவு

பெங்களூரு: எடியூரப்பாவின் சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைக்கப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.

கர்நாடகாவில் காங், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக குமாரசாமி உள்ளார்.

இம்மாநிலத்தில் 104 எம்எல்ஏ.க்கள் கொண்ட எதிர்க்கட்சியான பா.ஜ., குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரஷேன் தாமரை' என்ற பெயரில், மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏ நாகன கவுடாவிடம் கர்நாடகா பா.ஜ., மாநில தலைவர் எடியூரப்பா, ரூ.10 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக பேரம் பேசும் ஆடியோ ஆதாரத்தை முதல்வர் குமாரசாமி வெளியிட்டார். இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆடியோவில் இருப்பது தம்முடைய குரல் அல்ல என்றும் என்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டே விலகத்தயார் எனவும் சவால் விட்டார்.பின்னர் ஆடியோவில் இருப்பது தமது குரல் தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார். ஆடியோவில் இருப்பது தமது குரல் தான் என்றும் ஆனால் ஆடியோவை குமாரசாமி தமது வசதிக்கேற்ப மாற்றியுள்ளதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் .என முதல்வர் குமாரசாமி அறிவித்தார் இதையடு்த்து இந்த குழுவானது 15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • Rajan - chennai,இந்தியா

    விசாரணை ஆணையர் யார், அதன் தீர்ப்பு எப்படிருங்கவேண்டும் என்று உத்தரவிட்டபின் இந்த கமிஷனை அமைத்திருக்கிறார்...இந்தியாவில் எவரும் யோகியன் இல்லை போலிருக்கே

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      வழியிது.. தொடச்சிக்கோங்க.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    "யோக்கியன் வர்றான் .. சொம்ப எடுத்து உள்ள வையி .. " கிராமத்து சொலவடை

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      அது அப்போ, இப்ப, "யோக்கியனுவோ வர்றானுவோ .. சொம்ப எடுத்து உள்ள வையி .. " இப்போ, ரொம்ப பேர் இருக்கானுவோ. அதோட எல்லாவனுமே அப்படி.

  • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

    எட்டியின் திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிட்டது

  • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

    விசாரணை கமிஷனரிடம் எப்படி வசூல் செய்வது

  • கோமாளி - erode,இந்தியா

    பேசாம ஒரு எம்.எல்.ஏ ஆகலாம்.. எவளோ பணம்

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      அதுக்கும் காசு வேணும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இருக்கும்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    10 கோடி + அமைச்சராகி வேற சம்பாதிச்சிக்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement