Advertisement

நான்கு குழந்தைகள் பெற்றால் வருமான வரி விலக்கு

புடாபெஸ்ட்: ஹங்கேரி நாட்டில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெறும் பெண்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் ஆண்டுக்கு 32 ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக முஸ்லிம்கள் இங்கு குடியேறுவதை வலதுசாரி இயக்கத்தினர் தீவிரமாக எதிர்ப்பதால் நாட்டின் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது.

அதனால் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்திய பிரதமர் விக்டர் ஆர்பன் ''சரிந்து வரும் மக்கள் தொகையை சரிசெய்ய இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்த பின் இது ரத்து செய்யப்படும்.

நான்கு குழந்தைகளுக்கு மேல் பெறும் பெண்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படும். ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க பெண்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டும்'' என்று கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • rmr - chennai,இந்தியா

    இந்தியாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அனைத்து சலுகைகளும் நிறுத்த வேண்டும் ,

  • matheen - chennai,இந்தியா

    Natarajan stomach is burning....ha ha ha

  • ஆப்பு -

    நான் ரெடி. ஹங்கேரிக்கு குடியுரிமை குடுங்க எசமான்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஹங்கேரி மிக அழகிய நகரம். ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். ஏற்கனவே இங்கே இஸ்லாமியர்கள் , ஹங்கேரி குடியுரிமையுடன் இங்கே இருக்கிறார்கள். மத்திய இரோப்பில் எலக்ட்ரானிக் உபகரணங்கள் உற்பத்தி. மற்றும் ஏற்றுமதியில் ஹங்கேரி தான் டாப்.

  • pathy - muscat,ஓமன்

    இது என்ன கொடுமை சரவணா சார் ?? இங்கு நமது இந்தியாவில் மக்கள் தொகை யை கட்டுப்படுத்த முடியவில்லை? ஆனால் ஹங்கேரியில் குழந்தை வேண்டும் என்று சலுகைகளை கூடுகிறார்கள். எல்லாம் அவன் செயல் என்று தான் கூறத் தோன்றுகிறது.

  • கோமாளி - erode,இந்தியா

    நடக்காது ராஜா.. நடக்கவே நடக்காது.. ஒன்னோட நிறுத்திக்கலாம்னு தான் அந்த ஊர்க்காரர்கள் சிந்திக்கிறார்கள். அதுவுமில்லாம புதிய மிருகத்தனமான திருமண உறவுகளால் குழந்தை பெறுவதே அதிசயம்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    முஸ்லிம்கள் குடியேறினால் விரைவில் நாடே நாசமாகி விடும். எனவே ஹங்கேரி அரசு விரைவில் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement