Advertisement

ரபேல் விவகாரம்: பார்லி.,யில் இன்று சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல்

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, பார்லிமென்டில் இன்று(பிப்.,12) சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரான்சில் உள்ள, 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 'இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம்; டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை, இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு' என, காங்., தலைவர், ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த விவகாரம், பார்லிமென்டில் கடும் அமளியை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பார்லி.,யில் இன்று, சி.ஏ.ஜி., அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய லோக்சபாவின், கடைசி கூட்டம், நாளை முடியவுள்ள நிலையில், இன்று, சி.ஏ.ஜி., அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Suri - Chennai,இந்தியா

  இந்த பேரம் நடந்த போது இருந்த பைனான்ஸ் செகரட்டரி இப்பொழுது CVC . அப்பொழுது அவர் செய்த வேலையை அவரே சரி என்று சொல்ல போகிறார். நம் நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும். அதை சரி என்று கூறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கும்.

  • தலைவா - chennai,இந்தியா

   அப்போ கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும் ...கீறீங்க.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  நம் நாட்டில் மகாபாரத காலத்திலேயே அதிநவீன போர்க்கருவிகள் இருந்ததாக படித்துள்ளோம் .. அதையெல்லாம் நாம் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கலாமே... எதற்க்காக அந்நிய நாடுகளுக்கு அதுவும் வெள்ளைக்காரனுக்கு நம் காசை கொண்டுபோய் கொடுக்கவேண்டும் ?

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   காங்கிரஸ் இதுவரை வெளிநாட்டில் ஆயுதம் வாங்குவதையே செய்துவந்தது , அதற்கு காரணம் சுலபமாக பெரிய தொகைகளை ப்ரோக்கர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நாட்டின் முன்னேற்றத்தை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. மோடிதான் அதற்கான முயற்சியாக மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

  • தலைவா - chennai,இந்தியா

   அதான் அண்ணாமலை அப்போ எதுக்கு ரபேல் ஒப்பந்தம் நம்ம நாட்டிலேயே நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் மாதிரி புஷ்பக விமானம் மாதிரி எதையாவது தயாரிக்கலாம்?? என்பதுதான் பட்டிகாட்டானின் கேள்வி.

  • CECIL KALLADAI - chennai,இந்தியா

   இப்பொது ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. சில வருடங்கள் ஆகும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேர்தல் வர வர எல்லாமே சூடு பறக்கிறது

 • blocked user - blocked,மயோட்

  இதில் ஏதாவது ஒரு பக்கத்தை கத்தரித்து அதை highlight செய்து இதுதான் ஆதாரம் என்று காங்கிரஸ்காரர்கள் அடம் பிடிக்கப்போகிறார்கள்... வேறு ஒன்றும் நடக்காது...

  • TechT - Bangalore,இந்தியா

   வேறு என்ன வேண்டும், எந்த தவறும் நடக்கவில்லை என்று செர்டிபிகாடே தரவேண்டும் அப்படித்தானே ??

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   சர்டிபிகேட் தருகிற .............

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் தனி மனிதனுக்கு தலையூட்டுரிமை இருப்பதாக டாக்டர் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடுத்தபோது, ஊழல், ஊழல், ஊழல் அன்றி வேறொன்றுமில்லை என என்.ராம் அவர்கள், பத்திரிகை ஆளனாக இல்லாது வழக்கு உரிமை/ தலையீட்டுரிமைதனிமனிதனாக thanakku இருப்பதாக உச்சநீதிமன்றத்தினை அணுகுவதற்கு தடைகளென்ன? சுப்ரமணியஸ்வாமி அவர்களால் முடிந்ததை என்.ராம் அவர்கள் நாடறிந்த ஒரு நெறியாளர் என்றமுறையில் அரசின் தவறுகளை நீதிமன்றத்தை அணுகுவதன் வாயிலாக உண்மை, உண்மை, உண்மைத்தவிர தான் வாதிப்பது வேறொன்றுமில்லை என நிரூபிக்கலாமே?

  • MANI DELHI - Delhi,இந்தியா

   நீங்கள் எந்த டாக்டர் என்று தெரியவில்லை.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  ஊழல் தடுப்பு அம்சம் இன்மை, வங்கி உத்தரவாதமின்மை ஆகியவற்றால் rafale விமானம் வலிமையற்றதாக கருத்துவதா? அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் வாபஸ் வாங்கவா என தேர்தல்கள் ஒரு அங்கமாக மக்களின் அபிப்ராயத்தை கேட்பதுகூட அதிக ஓட்டினை பெற வழிவகை செய்யாதா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement