Advertisement

21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் சந்தேகமே!

'தமிழகத்தில், லோக்சபா தேர்தலோடு சேர்ந்து, காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடப்பது சந்தேகமே' என, டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மார்ச் முதல் வாரத்தில், தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. இந்த தேர்தல், தமிழகத்தில், வழக்கம் போல, ஒரே கட்டமாக தான் நடத்தப்படும் என, தெரிகிறது.

இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில், 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக, தேர்தல் கமிஷனே அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது. இத்துடன், ஓசூர் தொகுதியும் சேர்ந்தால், 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள், எப்போதோ நடந்திருக்க வேண்டும். விதவிதமான காரணங்கள் கூறப்பட்டு, அங்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், தற்போது, லோக்சபா தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது.


சிரமம் இல்லை:தமிழகம் முழுவதும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கும்போது, இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில், கூடுதலாக ஒரு இயந்திரத்தை வைப்பதில் எந்த சிரமமும் ஏற்பட்டுவிடாது. அதனால், 'இடைத்தேர்தல்களை தள்ளிப்போட, இனியும் காரணம் சொல்லிவிட முடியாது' என, பலரும் நம்புகின்றனர். ஆனால், உண்மை நிலவரம் வேறு. அ.தி.மு.க., வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையிலான கூட்டணி பேச்சின் முக்கிய பேரமே, இது தான்.

அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, 'லோக்சபா தேர்தலில் மொத்தமாக படுதோல்வி கிடைத்தாலும் பரவாயில்லை; சட்டசபை இடைத்தேர்தல்கள் வெற்றி முக்கியம்' என, நினைக்கிறது. சட்டசபை தொகுதிகளின் வெற்றி, தோல்வி தான், அ.தி.மு.க., ஆட்சியின் ஆயுளை தீர்மானிக்கப் போகிறது. தொண்டர்களை முடுக்கி வேலை வாங்குவது, தீவிர பிரசாரம், பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு வியூகங்களுடன், நேரடியாக களத்தில் இறக்கினால் தான் வெற்றி பெற முடியும்.

அ.தி.மு.க.,வின் ஒட்டுமொத்த தீவிரமும், சட்டசபை தொகுதிகளில் இருந்தால், அதோடு சேர்ந்து நடக்கும் லோக்சபா தேர்தலில், போதிய கவனம் செலுத்துவது தானாகவே குறையும்.

கனிமொழி மோப்பம்:இது, அ.தி.மு.க., மட்டுமல்லாது பா.ஜ., உட்பட, பிற கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும் என, கருதப்படுகிறது. இதனால், இடைத்தேர்தல்களை, லோக்சபா தேர்தலுக்கு பின் பார்த்துக் கொள்வது என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம், தி.மு.க.,வின் காதுகளை எட்டியது. இதையடுத்து, அந்த கட்சியின் ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, தலைமை தேர்தல் கமிஷனில், 'லோக்சபா தேர்தலோடு சேர்த்து, சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டும்' என, கோரிக்கை மனு அளித்தார்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அறிக்கை மூலமாக, இவ்விஷயத்தை குறிப்பிட்டு, 'சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்' என, எச்சரிக்கை விடுத்ததன் பின்னணியும் இது தான். எனவே, அ.தி.மு.க.,- - பா.ஜ., இடையிலான கூட்டணியில், கடைசி நேர சிக்கல் ஏதும் ஏற்படாத வரை, லோக்சபா தேர்தலோடு, சட்டசபை இடைத்தேர்தல்கள் சேர்த்து நடத்தப்படுவது சந்தேகமே. இவ்வாறு, டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சட்ட மன்ற தேர்தலும் நடக்காது... உள்ளாட்சி தேர்தலும் நடக்காது .... (OPS & எக்ஸ்) அவர்களால் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு தமிழ் மக்களை படு குழியில் தள்ளி விடுவார்கள் .... காவிகளின் பதவி வெறி படுத்தும் பாடு..

 • rmr - chennai,இந்தியா

  மோடியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி எதற்கு இந்த உள்ள திராவிட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ? தேவை ஒரு மாற்று . தமிழ்நாட்டை விற்று விடுவார்கள் இந்த திருட்டு திராவிட கட்சியினர் , ஆகையால் மக்கள் எச்சரிக்கையாக வாக்களிக்க வேண்டும்

 • Sellappa - Chennai,இந்தியா

  தற்போதைய தேர்தல் கமிஷன் மத்திய அரசின் அடிமை அமைப்பு. சேஷன் என்ற ஆண் மகன் தலைவராக இருந்தபோது தன்னிச்சையாக செயல் பட்டது போல் இவர்களால் முடியாது. அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டால் 21தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாததற்கு நொண்டி சாக்குகள் சொல்லப்படும். கூட்டணி அமையாவிட்டால் 21தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இப்படியே உங்க ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக மக்கள் நலனை புறந்தள்ளுவது வெட்கக்கேடானது. இவ்வளவு அவலங்களையும் அனுமதித்துக்கொண்டு இந்த திருடர்களை ஆட்சியில் தொடரவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் போராட்டம் வெடித்தால் இந்த திருட்டு கூட்டம் காணாமல் போய்விடும்.

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  லோக் சபா தேர்தலில் மொத்த தொகுதியில் படுதோல்வி அடைத்தாலும் பரவாயில்லை என்று எடப்பாடி நினைக்கிறாரா? தினம் தினம் ஒவ்வொரு செய்தி கூறுகிறீர்கள். நேற்று தான் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக என மெகா கூட்டணி என்று கூறினீர்கள், இந்த கூட்டணியை விட திமுக காங்கிரஸ் ஒன்றும் பலமான கூட்டணி அல்ல. செம்ம காமெடி. திமுக தான் வெற்றி பெரும் என்று ஊடகங்கள் மட்டும் தான் கருத்து திணிப்பை செய்கிறது. RK நகர் ல கூட அப்படி தான் கருத்து திணிப்பு செய்தார்கள். நினைவில் கொள்க.

Advertisement