Advertisement

அரசு ஊழியர்கள் மீதான வழக்கு; வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை

சென்னை: ''அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெறுவது குறித்து, அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்,'' என, மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.

பல முறை பேச்சு:சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்த பின், தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, காங்., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் ஆகியோர் எழுந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை, திரும்பப் பெற வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும்' என, வலியுறுத்தினர்.

அதற்கு பதில் அளித்து, அமைச்சர், ஜெயகுமார் கூறியதாவது: 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், ஜன., 22 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அவர்களுடன் பல முறை பேச்சு நடத்தப்பட்டது. அரசின் நிதி நிலையை எடுத்துக் கூறினோம். அதை ஏற்காமல், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மொத்தம், 7.41 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 2.10 லட்சம் பேர், அதாவது, 28 சதவீதத்தினர் மட்டும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.கைதுஅதில், சாலை மறியலில் ஈடுபட்ட, 6,521 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 1,656 பேர், சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின், போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, திரும்பப் பெறுவது குறித்து, அரசு ஆராய்ந்து முடிவு செய்யும்.

போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்குகளின் தன்மையைப் பொறுத்து, திரும்பப் பெறுவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Subbu - Singapore,சிங்கப்பூர்

  அரசாங்க ஊழியராகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. டிஸ்மிஸ் செய்யவேண்டும்

 • Subbu - Singapore,சிங்கப்பூர்

  கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் . தண்டனையை குறைக்க கூடாது . சம்பளத்தை குறைக்க வேண்டும்

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  என்ன புகழ் நீங்க அரசு ஊழியரா? ஏன் இந்த கரிசனம்....அப்போ அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக மறியல் செய்தது மட்டும் சரியா?

 • ஆப்பு -

  அவர்களோட ஓட்டுக்கு என்ன விலைன்னு அமைச்சருக்கு தெரியும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் அரசு ஊழியர்களுக்கு விரோதிகள். எதிரிகள். அரசுப்பணி கிடைக்காத விரக்தி என்று நினைக்கிறேன். தனியார் ஊழியர்களின் அராஜகங்கள் தெரியாததல்ல. வாட்டர் கேன் கம்பெனிகள் முதல் லேப்டாப், எல்சிடி டி.வி. கம்பெனிகள், தனியார் பஸ் கம்பெனிகள் போன்றவற்றின் ஊழியர்கள் பொதுமக்களை அப்படியே மதித்து நடந்து கொள்கிறார்களா? எந்த அரசு ஊழியரும் குற்றம் எதுவும் புரிந்து விடவில்லை. போராட்டம் சிறையில் போடக்கூடிய குற்றமும் அல்ல. ஸ்டாலின் வலியுறுத்தியது போல "வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்".

  • Subbu - Singapore,சிங்கப்பூர்

   என்னப்பா புகழு , நீ அரசாங்க ஊழியரா . கண்டிப்பாக சம்பளம் குறைக்க வேண்டும், தண்டனை கொடுக்க வேண்டும்

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  அரசு ஊழியர்கள் என்ன கடவுளா? பொது மக்களுக்காகத்தான் அரசாங்கம் அதிகாரிகள் எல்லாம்.. சாலை மறியல் செய்தால் பொது மக்களை தடியடி நடத்தும் காவல் துறை இவர்களை அடிக்காமல் விட்டதே வதி மீறல்.. எனவே மறியல் செய்தவர்களுக்கு ரூபாய் 5000 மட்டும் அபராதம் விதித்து விட்டுவிடலாம்.. இனி யார் சாலை மறியல் செய்தாலும் அபராதம் விதிக்க வேண்டும்.. அபராதம் கட்ட காசில்லாதவர்களுக்கு அவர்களின் ஆதார் எண்ணை பெற்று (ஜாமின் போது) இனி அரசின் நல திட்டங்கள் ரத்து செய்ய வேண்டும்... இதை சொல்லவும்.. சாலை மறியல் என்ற வார்த்தையே அழிந்து விடும் .....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேர்தல் வருது இல்லையா... அவர்கள் ஒத்துழைப்பு வேண்டுமே...

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  அரசு கண்டிப்பாக நடவடிக்கைகள் எதையும் நிறுத்தக்கூடாது. இல்லையேல் இதையும் சுடலை தனக்கு வெற்றி என்று சாதகமாக போஸ்டர் ஒட்டுவார்.

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  அப்போ பொறுப்பை பொதுமக்கள் எங்களிடம் விடறீங்கன்னு சொல்லுங்க. சரி சரி. பொதுமக்கள் மற்றும் பொது நல சங்கங்கள் இவங்க வேலை நிறுத்த நடவடிக்கைக்கு தண்டனையை. ஆரம்பிக்க தெரிஞ்ச உங்களுக்கு, முடிக்க தெரியலையே ?? உங்க building strong , but base weak .

 • blocked user - blocked,மயோட்

  தவறுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்... இல்லை என்றால் சுடலை போன்றோர் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இப்படி வாபஸ் வாங்கினால் நாளை தாங்கள் என்னசெய்தாலும் தண்டனையிருக்காது என்னும் எண்ணம் உண்டாகும் தவறுசெய்தவர்கள் கண்டிப்பாக தண்டனைபெற்றாகவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement