Advertisement

கூட்டணி முடிவு விரைவில் அறிவிப்பு: ஸ்டாலின்

சென்னை: ''தி.மு.க., கூட்டணி குறித்து, விரைவில் அறிவிக்கப்படும்,'' என, சென்னையில் நடந்த திருமண விழாவில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருவள்ளூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., - வி.ஜி.ராஜேந்திரன் மகள் பிரியதர்ஷினி - தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் வருண் ஆகியோரின் திருமணம், ஸ்டாலின் தலைமையில், நேற்று திருவான்மியூரில் நடந்தது.

விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., கூட்டணி குறித்து, விரைவில் அறிவிக்க உள்ளோம். ஆனால், இன்னொரு கூட்டணி அமைய உள்ளதையும், நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க., யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்பது குறித்து, நாள்தோறும் பத்திரிகைகளில் செய்தி வருகிறது.

லோக்சபா தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரவுள்ளது. ஆறு மாதத்திற்கு மேல், எந்த சட்டசபை தொகுதியும் காலியாக இருக்கக் கூடாது என்பதால், தேர்தல் நடத்தியே தீர வேண்டும். ஆனால், இடைத்தேர்தல் வராமல் தடுக்கும் சூழ்ச்சிகளை, மத்திய அரசு செய்கிறது.

அரசு விழா என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும். ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற, மதுரை நிகழ்ச்சியிலும், திருப்பூர் நிகழ்ச்சியிலும், இது, பின்பற்றப்படவில்லை. ஆனால், பிரசாரத்தில் மட்டும் தமிழிலும், திருக்குறளை மேற்கோள் காட்டியும் பேசுகிறார் என்றால், அவர், மக்களை ஏமாற்றுகிறார் என்று தானே அர்த்தம். எனவே, வரும் தேர்தல் வாயிலாக, மத்தியிலும், மாநிலத்திலும், நல்ல விடிவு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

ஒரே மேடையில் ஸ்டாலின், கமல்! சமீபத்தில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க., - தி.மு.க., ஊழல் கட்சிகள்; ஊழல் பொதி மூட்டைகளை, நாங்கள் சுமக்க மாட்டோம்' என்றார். அதற்கு பதிலடியாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், நடிகருமான சந்திரசேகர், கமலை கடுமையாக விமர்சித்து, அறிக்கை வெளியிட்டிருந்தார். தி.மு.க., நாளிதழில், 'பூம் பூம்காரனின் மாடு, என்ன செய்து விடும்' என்ற தலைப்பில், நேற்று கட்டுரை வெளியாகி உள்ளது. அதிலும், கமலை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய திருமண விழாவில், கமலும் பங்கேற்றார். ஒரே மேடையில், அவரும், ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து பேசினர்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேடைக்கு வந்த போது, அவரையும் வரவேற்று, தன் அருகில் அமர வைத்தார், ஸ்டாலின்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (45)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இப்போதுள்ள தமிழன் கொஞ்சம் முழிச்சிக்கிட்டான்யா -அப்படின்னு தெரியுது சுடலையின் நடவடிக்கைகளை குறித்து கருத்துக்கள் வருவது வைத்து. ஆனால் அவர் அப்பன் முக காலத்தவர்கள் ஏமாளியாய் அவரின் பேச்சை மட்டுமே நம்பி ஐந்து முறை தேர்ந்தெடுத்து நாட்டையே கெடுத்துவிட்டார்கள்.அவர்களில் இப்போது உயிரோடு இருப்பவர்கள் வாக்குகளை மாற்றி போடவும் மேலும் குடும்பத்தாரை திமுகவுக்கு எதிராக (அதிமுக பரவாயில்லை,அனைத்து எம்மேலேக்களும் சட்டசபைக்கு நீறணிந்து குங்குமப்பொட்டுடனேயே வருகிறார்கள்)வாக்களித்து பிராயச்சித்தம் செய்து kola வேண்டும்.

 • Sangeedamo - Karaikal,இந்தியா

  கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் தமிழ்த் தாயை அல்லது பாரத் தாயை வணங்குபவன் யார் ?? உண்மையான தமிழ் மக்களாக இருந்தா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்....

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  கூஜா தூக்கும் கூட்டம் சீட் கேட்டால் பரவாயில்லை ...சீட்டோடு சேட்டையாக துட்டு கேட்டால் எப்படி ?? வருமானம் கம்மியாக இருக்கும் இந்தக்காலத்தில் எப்படி ஒத்துவரும் ..சரி சீட்டுதானே நாம் தோதால் என்ன அவன் தோத்தால் என்ன எல்லாம் ஒன்றுதானே என்று எண்ணி சீட்டு கொடுக்கலாம் ....ஆனால் துட்டு ....கட்டாயம் கிடையாது ....சொல்லிப்புட்டேன் ...

 • Tamilselvan - Chennai,இந்தியா

  தலைவா டெபாசிட் போகாமல் பார்த்து கொள்ளவும் .டோக்கன் பார்ட்டிகள் சுத்தி கொண்டு இருக்கின்றனர்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  சீக்கிரமாக முடிவை சொல்லு சுடலை,பாவம் பூனைமேல் மதிலாக,ராசியில்லா தலை,கட்டபஞ்சாயத்து தலை,தகர உண்டிதலைகள்,மனிதநேயமற்ற தலை, குந்திகினு இருக்கு.

Advertisement