Advertisement

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட மாட்டோம்: கேரளா

'முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணையை, தமிழக அரசின் ஒப்புதல் மற்றும் அனுமதி இல்லாமல் கட்ட மாட்டோம்' என, கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.


தமிழக - கேரள எல்லையில், கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது, முல்லைப் பெரியாறு அணை.

அரசு அனுமதி:இந்த அணைக்கு பதிலாக புதிய அணையைக் கட்டுவதற்கான முயற்சியில், கேரள அரசு ஈடுபட்டது. புதிய அணை கட்டுவது தொடர்பாக, சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவதுாறு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


தமிழக அரசு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், 2014ல் தீர்ப்பு அளித்தது. 'இந்த அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டக் கூடாது' என, அந்த தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதான இல்லை' எனக் கூறி, புதிய அணை கட்டும் முயற்சியில், கேரளா ஈடுபட்டுள்ளது.


புதிய அணையை கட்டுவதற்கான திட்டத்தை, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கான முதற்கட்ட, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இது, 2014ல், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. அதனால், கேரளா மற்றும் மத்திய அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு மனுவில் கூறப்பட்டு உள்ளது.


இந்த வழக்கை, நீதிபதிகள், ஏ.கே. சிக்ரி, அப்துல் நசீர் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், கேரள அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர், ஜெய்தீப் குப்தா, நேற்று வாதிட்டதாவது: முல்லைப் பெரியாறில், புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கவில்லை.

சாத்தியக்கூறுகள்:புதிய அணை கட்டுவது தொடர்பான, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகள், சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக அரசின் ஒப்புதல் மற்றும் அனுமதி பெறாமல், முல்லைப் பெரியாறில் அணை கட்ட மாட்டோம். இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து, இந்த வாதத்தை பதிவு செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறியுள்ளது.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  பினராயி விஜயன் ஆரமபத்திலிருந்தே இதே நிலைப்பாடே தான் சொல்லி வருகிறார் ... அண்டை மாநிலங்களிடம் நட்புறவோடு இருப்பதையே விஜயன் விரும்புகிறார் ...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  ஓட்டுவாங்குவதற்கு வளர்ச்சி பணிகளை செய்யாமல் இப்படி மக்களை முட்டாளாக்கி வாங்குவது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  சும்மா சும்மா ஓசி பிரியாணி என்று எழுதும் பாஜக அன்பர்கள் அறிவது: இங்கே திருச்சூரில் மோடி வந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் ஓசி பிரியாணி தரப்பட்டது. திருச்சூரில் யார் செலவு தெரியவில்லை. கொச்சினிலும் மோடி நிகழ்ச்சி க்கு வந்தவர்களுக்கு ஓசி பிரியாணி வழங்கப்பட்டது. ம.அரசின் செலவில். இந்த நிஜ நிகழ்வை, ஊடகங்கள் மறைத்தது ஏன் தெரியவில்லை. இப்போதேனும் பதிவிட்டால் நன்றி. வாசகர்களும் அறிந்து கொண்டு இனி ஓசி பிரியாணி என்று தங்களையே அறியாமல் எழுதுவதை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஏன் இப்படி காழ்ப்புணர்ச்சி மற்றும் இன வெறி பிடித்து அலைகிறார்?? ப்ரஷர் மாத்திரை போட்டுக்கலையோ? எந்த மாநில அரசாவது இன்னொரு மாநில கட்சி க்கு லஞ்சம் தர முடியுமா? ஒரு 100 ரூபாய்க்கு தெருவிளக்கு பல்ப் மாற்றக் கூட ட்ரஷியரிலிருந்து பணம் வர வேண்டும். கேரள அரசு தமிழகத்துக்கு எந்த அக்கவுண்ட் ஹெட்டில் லஞ்சம் தரும்? அறிவற்ற தனமாக எழுதக்கூடாது ப்ளீஸ்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இல்லை புகழ்...... ஹிந்து விரோத ஓசிபிரியாணி திமுக வந்தால் கண்டிப்பாக காசு வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்து விடுவார்கள். தீயசக்தி 1974ல் செய்தது மறந்துவிட்டதா? அவனால்தானே ஹேமாவதி ஹாரங்கி அணைகள் கர்நாடகத்தில் கட்டப்பட்டு காவிரி நீர்வரத்து அடியோடு குறைந்து போனது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  முதலில் ஐயப்பன் கோயிலை கவனியுங்கள்...

 • blocked user - blocked,மயோட்

  இது என்ன சூரியன் மேற்கில் உதிப்பது போன்ற ஒரு நிலைப்பாடு... ஆச்சரியம்...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  கேரளாவில் பிஜேபி வலுவடைந்தால், கண்டிப்பாக கேரளா அணைகட்ட அனுமதி கிடைக்கும். தமிழகம் தொடர்ந்து எதிர்க்க தான் வேண்டும். வெள்ளத்தின்போது உதவியபோதே, கேரளா தமிழகத்தின் மீது தவறான புகாரை வேண்டுமென்றே கோர்ட்டில் கூறியது. அண்டைமாநிலத்து காரர்கள் தமிழகத்தை இளிச்சவாய மாநிலம் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தான் முன்னேறும். துரோகம் செய்ய நினைப்பவர்கள் ஒருக்காலும் முன்னேற முடியாது. அதற்காக நாம் அண்டைமாநிலத்தோரை, எதிரிகளாக பார்க்க கூடாது. வந்தவர்களை வரவேற்கும் நல்ல பழக்கமும், அண்டை மாநிலத்தோருக்கு உதவி செய்யும் வரை, அவர்கள் நமக்கு பாதகம் செய்தாலும், ஆண்டவன் நமக்கு பக்கபலமாக இருப்பான்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கம்மிகளை திட்டியவர்களும் கோர்ட்டை திட்டியவர்களும் யு டர்ன் அடிங்க. வேற வழி?

  • Thiru - Singapore,சிங்கப்பூர்

   என்னத்த யு டர்ன்...? கட்டப் போகாத அணைக்கு எதற்கு சுற்றுச் சூழல் மற்றும் சாத்தியக் கூறுகளுக்கான ஆய்வு...?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement