Advertisement

திருமணமான மூன்றே நிமிடத்தில் விவாகரத்து

குவைத்: குவைத் நாட்டில் திருமணமான மூன்றே நிமிடத்தில் புதுமண தம்பதியர் விவாகரத்து பெற்றது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லப்பட்ட காலங்கள் போய் சில மாதங்கள் சில ஆண்டுகளிலேயே திருமண உறவு முறிந்து போகும் கால கட்டம் இது என்றாலும் திருமணம் ஆன சில நிமிடத்தில் விவாகரத்து என்பது நாம் கேள்விப்படாத ஒன்று.சமீபத்தில் குவைத்தில் ஒரு இளம் ஜோடி நீதிபதியின் முன் பதிவுத் திருமணம் செய்தனர். திருமணமான அடுத்த நொடி திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் கணவர் மனைவியை 'முட்டாள்' என்று திட்டவே ஆத்திரமடைந்த மனைவி திருமணத்தை நடத்தி வைத்த நீதிபதியிடம் 'இந்த திருமணத்தை ரத்து செய்யுங்கள்' என்று கூறியுள்ளார். இதனால் திருமணமான 3 நிமிடங்களில் அவர்களது திருமண ஒப்பந்தம் முறிக்கப்பட்டு விவாகரத்து அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் குவைத் வரலாற்றில் இதுதான் முதல் முறை.

இதனிடையே அப்பெண்ணுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''ஆரம்பத்திலேயே கணவன் இப்படி நடந்துகொண்டால் நாட்கள் செல்லச்செல்ல இன்னும் மோசமாகிவிடும். அவரை விட்டுப் பிரிந்ததே நல்லது'' என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.மற்றொரு நெட்டிசன் ''சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அனுசரித்துப் போகாவிட்டால் யாருக்குமே திருமண பந்தம் நிலைக்காது'' என்று தெரிவித்துள்ளார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (44)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  அது சரி ,நாட்டுக்கு நாடு கலாச்சாரம் வேறு படுமாமே இது ரொம்ப புதுசா இருக்கே? இப்படி உள்ள ஒரு நாடு தேவையா?

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பந்திக்கு முந்தினவன் பாக்கியவான்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இன்னைக்குத்தான்யா ரஜனி வீட்டில் ஒரு கல்யாணம் நடக்குது இப்போதான் இந்த செய்தியை பெருசா போடணுமா

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இந்து முறைப்படியானால் தாலி கட்டி மூன்றாவது முடிச்சுப் போடும் நேரமளவு கூட நிலைக்காத திருமணம் மாலைக்குள் இன்னும்....

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  திருமணம் என்பது குடும்பம் பார்த்து சுற்றத்தார் குணம் பார்த்து பெண் எடுத்தல் அல்லது பெண் குடுத்தால் தான் திருமணம். இப்போது அது எங்கே இருக்கிறது? அழகு, உயர்ந்த படிப்பு, சம்பளம், அமெரிக்காவில் இந்த மாகாணத்தில் இருக்கிறாரா ?, இரண்டு வயதுக்குள் வித்தியாசம், உயரம் ரெண்டு இஞ்சுக்கு மேலே இருக்கக்கூடாது, மகனுக்கு வயதான தாய் தந்தை, தங்கை, தம்பி இருக்ககூடாது என்றெல்லாம் கணக்கு பார்த்து திருமணம் செய்தால் இப்படித்தான் நடக்கும். இந்தியாவில் இது மிகவும் அதிகம்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பரவாயில்லை விவாகரத்தோடு விவகாரம் முடிஞ்சு போது, இங்க படிக்கிற செய்தியெல்லாம், மணமகன் கொலை, காதலனோடு மணப்பெண் தப்பியோட்டம், போலீஸ் வலைவீச்சு, கல்யாணம் ஆன மூன்று நிமிடங்களில் சோகம் இப்படித்தானே வரும்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நானூறு வருஷத்துக்கு முன்னால் கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றும் ஜொலிக்கிறது, அது காதலின் அழியா சின்னம். இன்று நடப்பதெல்லாம் வாழ்க்கை ஒப்பந்தமே, ஒரு நொடியில் முறிவதில் ஆச்சரியமில்லை.

  • Ram kumar - chennai,இந்தியா

   அது எத்தனையாவது காதல் கல்யாணம் அதற்கு பிறகு உங்கள் காதல் மன்னர் எத்தனை கல்யாணம் பண்ணினார் என்பதையும் பகிரலாம்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   , ஒரு உவமைக்கு சொன்னா, நீங்க எங்கையோ போய்ட்டீங்களே..

  • G.Krishnan - chennai,இந்தியா

   தாஜ்மஹால் என்பதே ஒரு கள்ளக்காதலில் சின்னம்.... வரலாற்றை நன்றாக படியுங்கள், திருமணமான பெண்ணாகிய மும்தாஜை ஷாஜகான் கள்ளக்காதல் செய்து அபகரித்து கொண்டார்..... அதனால் தாஜ்மஹாலை காதலின் சின்னமாக கருதுவதே தவறு...... உவமைக்கு சொன்னாலும் உண்மையான நிகழ்வை சொன்னால்தான் அடுத்துவரும் தலைமுறை சரியாக புரிந்து கொள்வார்கள் . . . .இல்லையென்றால் தாஜ்மஹால் போன்றவற்றை காதலின் சின்னம் சொல்லி காதல் என்ற மென்மையான நல்ல உணர்வை தவறுதலாக புரியவைக்ககூடாது . . . .

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  யாரோ எங்கேயோ எதற்கோ நடக்கிறது அதை அந்த நாடு பார்த்துக்கொள்ளமே ..

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  கலியாணம் என்பது வெறும் கேலிக்கூத்தாக இருக்கு கண்றாவி கணவன் அரக்கனாவே பிஹேவ் பண்ணாலும் மனைவி மஹாபோல்லாதாக இருந்தாலும் அடஜஸ்ட் பண்ணிண்டு போறவா நெறைய இருக்க இதுபோலவும் ருக்கே கலியுகம் முத்திண்டுவரது இன்னம் என்னவெல்லாம் பார்க்கபோறோமோ GOK

 • shyamnats - tirunelveli,இந்தியா

  மூன்று நிமிடம் என்ன ஒரு நாளைக்கு ஒரு முறை திருமணம் என்றால் கூட வருசததுக்கு 365 ஹையா ஜாலி

 • ஆப்பு -

  இது சூப்பரா...பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Nowadays the humen beings are become worse than five senses creatures in their's married lives.Even the five senses creatures are living with their mates till the youngs are manageed themselves where as the six senses social animals are divorcing just before lives starts as mentioned in this news.It clearly shows the world is heading towards it's Pearazhivu very soon.

 • Abraham David - Tuticorin ,இந்தியா

  நல்லவேளை தப்பித்தான் அந்த மணமகன்.

 • Pannadai Pandian - wuxi,சீனா

  கோர்ட்டில் இன்னொரு அழகிய பெண்ணை பார்த்திருப்பான், பொண்டாட்டியோட சண்டை போட்டிருப்பான். அவளும் கோர்ட்டுக்குள் அழகிய டவாலியை பார்த்திருப்பாள், காதல் மலர்ந்திருக்கும். இதை சொன்னால் இன்னொரு கொலை விழும்….

 • மதுவந்தி -

  நல்லவேளை குழந்தைகள் தப்பித்தன இந்த முட்டாள்களிடம் இருந்து.. பலர் முன் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யார் பேசினாலும் தப்புதான்.

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  எங்கள் ஊரில் ஓரு நாய் ஆறு குட்டிகளை பெற்றது.......

 • kulandhai Kannan -

  இந்த செய்தி ரஜினி குடும்பத்தினருக்கு தெரியாமல் இருந்தால் நல்லது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பெண்ணிற்கு பொறுத்துப்போகும் குணம் கம்மி .. ஆணிற்கு அவசர புத்தி அதிகம் என்று தெரிகிறது...

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  அன்றே ஒளவ்வை சொன்னார்... 'தாறு மாறாய் நடப்பாளாகில் கூறாமல் சந்நியாசம் கொள்"

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  அரபு நாடுகளில் பெண் சுதந்திரம் இல்லை என்று கூவும் மக்களே இப்போது என்ன சொல்வீர்கள்

  • TamilArasan - Nellai,இந்தியா

   தம்பி நீ அரபு நாட்டிற்கு போய் வந்து இருக்காயா? அரபு நாடுகளிலே மிக பெரிய நாடான சவுதியில் கடந்த ஆண்டுதான் பெண்களுக்கு வாகன ஓட்டும் உரிமையே வழங்க பட்டது... அது மட்டும் இல்லை ஆண் துணை இல்லாமல் தனியாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது அதே நாட்டில் அதுவாவது உனக்கு தெரியுமா? பெண்கள் தங்களின் வீட்டு வாகன ஓட்டிக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து அவனை மகனாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே டிரைவருடன் தனியாக வாகனத்தில் செல்லலாம் என்று பாத்தவா வித்திதவர்கள், உலகே அந்த பாத்வாவை படித்து அதிர்ச்சியில் உறைந்தது, எந்த உலகத்தில் ராசா நீ இருக்க செய்தி ஏதும் படிப்பது இல்லையா... இன்னும் கூறிக்கொண்டே போகலாம் - சரி வருத்தப்படாதே ரொம்ப கூவுற அது உன் உரிமை...

  • சுந்தரம் - Kuwait,குவைத்

   அரபு நாடுகள் என்பது குவைத் மட்டுமல்ல.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   படத்தை பார்க்கவில்லையா ? கிறித்துவர்கள் ஒப்பந்தம் இது

  • சுந்தரம் - Kuwait,குவைத்

   மன்னிக்கவும் அண்ணாமலை அவர்களே, குவைத், ஜோர்டான், சிரியா, எகிப்து, ஆகிய இஸ்லாமியர் நாடுகளில் மணப்பெண்ணுக்கு இப்படித்தான் அலங்காரம் செய்கிறார்கள். ( மணப்பெண்ணும் மணமகனும் இஸ்லாம் மதத்தை சார்ந்திருந்தாலும்)

 • Muruga Vel - Chennai,இந்தியா

  திருமணத்தை நடத்தி வைத்த நீதிபதியிடம் 'இந்த திருமணத்தை ரத்து செய்யுங்கள்' என்று கூறியுள்ளார் …. காஜி தானே நடத்தி வைப்பார் … கற்பனையில் எழுதிய செய்தியா ..

  • சுந்தரம் - Kuwait,குவைத்

   பத்திரிகை தர்மத்தை எதிர்த்து கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது.

  • Being Justice - chennai ,இந்தியா

   காஜி என்பது அரசு நியமித்த நடுவர் அல்லது நீதிபதி ஆகும். மதம் சார்ந்த செயல்களை மதம் சார்ந்த சட்டப்படி செய்வார்.

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

   ஐ.. மாற்று மதத்தின் பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து வாந்தி எடுக்கும் நபர் முருகபாய் என்பதை தெளிவாகிவிட்டார் நமது மாம்ஸு.. என்ணெத்தே மறைச்சாலும் குல்லா கட்டிக்கொடுத்துருதேப்பா

  • சுந்தரம் - Kuwait,குவைத்

   எதிர்த்து கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  ஆயிரம் காலத்து பயிர் என்ற காலம் போய் இப்போது திருமணம் என்பது "ஒரு நிமிடத்தில் களைய கூடிய ..ர்" ஆகி விட்டது.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இது இந்த கலிகாலத்தில் நல்ல முடிவே?

 • blocked user - blocked,மயோட்

  இருவருக்கும் விட்டுக்கொடுக்கும் பக்குவம் இல்லை என்றால் வாழ்க்கை நாசமாவதை தவிர்க்க முடியாது...

 • Ganesan Madurai -

  இஸ்லாமில் 1000 காலம் சென்டிமென்ட் கிடையாது.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அவனும் யோசனை பண்ணல, இதுவும் யோசிக்கல..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இப்ப உண்மையாகவே யார் முட்டாள்ன்னு தெரியலை..

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   நாமதான்..

  • சிற்பி - Ahmadabad,இந்தியா

   இதை மெனக்கெட்டு படிக்கிறோம் பாருங்க நாமும் தான்..

  • meenakshisundaram - bangalore,இந்தியா

   இது என்ன கேள்வி,இவர்கள் எல்லோருமே முட்டாள்கள். எதற்கு கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்பது இவர்கள் இருவருக்குமே தெரிய வில்லை. இவர்கள் திருந்தவே மாட்டார்கள். ஆமாம் ,கல்யாணத்தை நடத்த நீதிபதியா?

  • தலைவா - chennai,இந்தியா

   நாம் எல்லாவற்றையும் நமது கலாச்சாரத்தோடு பொருத்தி பார்க்கிறோம் அது சரியாக மற்றொரு நாட்டிற்கு பொருந்தாது. திருமண பந்தம் என்பது இதயங்கள் அன்பு என்னும் சங்கிலியால் பிணைக்க பட்டு இருக்க வேண்டுமே தவிர அடிமை சுணகிளியாகி விட கூடாது இன்றைய காலத்தில் மனிதன் வேகமாக வளர்ந்து விட்டான் அதனால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது சரியாக வாழ முடியாது என்று உறுதியாக தோன்றினால் பிரிந்து தததமது வாழ்க்கையை சரியான நபரோடு அமைத்து கொள்வதே சரியாகும்.

  • Being Justice - chennai ,இந்தியா

   காஜி என்பது அரசு நியமித்த நடுவர் அல்லது நீதிபதி ஆகும்.

  • HSR - Chennai,இந்தியா

   அலையாமே இருந்தா சரி..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement