Advertisement

ராஜதர்மத்தை மீறி விட்டார் மோடி: சந்திரபாபு நாயுடு

புதுடில்லி: ''ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால், பிரதமர் நரேந்திர மோடி, ராஜதர்மத்தை மீறி விட்டார்; அவருக்கு தக்க பாடம் புகட்டுவோம்,'' என, அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, டில்லியில், நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் கூறியதாவது: குஜராத்தில், 2002ல், கலவரங்கள் நிகழ்ந்த போது, 'ராஜதர்மம் பின்பற்றப்படவில்லை' என, முன்னாள் பிரதமர், மறைந்த வாஜ்பாய் கூறினார். தற்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆந்திராவில், ராஜதர்மத்தை பின்பற்றவில்லை. எங்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவுக்கு, மத்திய அரசு அநீதி இழைத்து விட்டது. அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஐந்து கோடி ஆந்திர மக்கள் சார்பில், மத்திய அரசை எச்சரிக்கிறேன். ஆந்திர மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட போது வழங்கப்பட்ட வாக்குறுதி களை நினைவூட்டவே, இங்கு வந்துள்ளேன். என் மீதும், என்னை சார்ந்தோர் மீதும் தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம் என, எச்சரிக்கிறேன்; அது, தேவையற்றது. ஒரு மாநிலத்தின் தலைவனாக, என் கடமைகளை நான் செய்கிறேன். எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி வலியுறுத்துகிறோம்.

நாட்டை ஆளும் தகுதி, நரேந்திர மோடிக்கு இல்லை. ஆந்திர மக்களிடம் ஏற்பட்டுள்ள மன வருத்தங்களை, மேலும் அதிகரிக்கும் வகையில், குண்டூருக்கு அவர் சென்றுள்ளார். டில்லியில் அமர்ந்தபடி, எங்களை தவிர்த்து விடலாம் என மோடி நினைக்கிறார்; அது தவறு. நட்பு கட்சிகளின் ஆதரவுடன், எங்கள் நோக்கத்தை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சியினர் ஆதரவு:ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, டில்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று, அம்மாநில முத்லவர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருந்த மேடை, மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிக்கும் தளமாக மாறியது.

காங்., தலைவர் ராகுல், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திரிணமுல் காங்கிரசின், டெரக் ஓபிரையன், தி.மு.க.,வின், திருச்சி சிவா, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நேரில் சென்று, சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

ராகுல் பேசுகையில், ''ஆந்திர மக்களிடம் இருந்து திருடி, அந்த பணத்தை, அனில் அம்பானியிடம், பா.ஜ., அரசு கொடுத்துள்ளது,'' என்றார்.


அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ''பா.ஜ., அல்லாது பிற கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், பாகிஸ்தான் பிரதமரை போல், பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்கிறார்,'' என்றார்.
ரூ.60 லட்சம் செலவு: உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதற்காக, ஆந்திராவிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர், டில்லிக்கு, இரண்டு ரயில்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்கள் டில்லியில் தங்குவதற்கும், பிரபல ஓட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில், தங்குமிடம் மற்றும் சாப்பாடு செலவுக்காக மட்டும், தெலுங்கு தேசம் கட்சி சார்பில், 60 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
மாற்றுத்திறனாளி தற்கொலை: டில்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று, முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அதில் பங்கேற்க, ஆந்திராவில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளி, தவளா அர்ஜுன் ராவ், ஆந்திர பவனுக்கு வெளியே, 'வீல் சேரில்' அமர்ந்த நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், நிதி நெருக்கடியால் தற்கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  வேலை இல்லாத்திண்டாட்டம் தேர்தல் முடியும் வரை தலை தூக்க முடியாது. மக்களின் வரிப்பணத்தை, வளர்ச்சிப்பணிகளுக்கு அல்லாமல் செலவு செய்வதை உத்தர பிரதேச முன்னாள் முதல் அமைச்சர் மாயாவதி 'யானை உருவ சிலை' விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிதான் ஏற்கவேண்டும் என கருத்து தெரிவிக்கவில்லையா? உண்ணா நோன்பு போராட்டத்தில் உணவு, தங்கும் 4 அல்லது 5 நட்சத்திர ஹோட்டல் செலவும் மக்கள்தான் ஏற்கவேண்டுமா? யார் நீதி மன்றத்தை அணுகுவது?

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  யார் யாருக்கு பாடம் புகட்டுவது? நாம் பாடம் புகட்டுவதாக நினைத்துக்கொண்டு, யாருக்கு நாம் பாடம் புகட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அவர் நமக்கு பாடம் புகட்ட நேரிடலாம் இல்லையா? மக்கள் கூட நாம் எதிர்பார்த்தவகையில் இல்லாமல், நாம் எதிர்பார்க்காத வகையில் பாடம் புகட்டக்கூடாதா என்ன? முயற்சி ஒன்றுதான் தெய்வத்தால் ஆகாது என்றாலும் மெய்வருத்த கூலிதரும்., நாம் ஒன்று நினைக்க தெய்வம் பிறிதொன்று நினைத்தால் தெய்வத்தின் பாடத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டிவரும்.

 • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

  ஆந்திராவை இரண்டாக பிரித்தது சோனியா அம்மையாரின் வேலை. அப்போது மோடி ஆட்சியில் இல்லை. பிறகு நாயுடு நான்கு ஆண்டுகள் மோடியுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்து விட்டு, இப்போது ராஜநீதி என்று கூறி தனது ஆட்சியை தாங்கி பிடிக்க மத்திய அரசு நிதியை கேட்கிறார். அந்த மாதிரி செய்தால், மற்ற மாநிலங்களும் கேட்கமாட்டார்களா? உடனே இங்கே மத்திய அரசின் ,மாற்றாந்தாய் மனப்பாண்மை என்று கூவி போர்க்கொடி துக்க வைகோ போன்றோர் தமிழ்நாடு காத்து இருப்பார்களே. அரசியல் வாதிகள் எதிர்வினை என்ன என்பதையும் யோசித்து பேசவும்.

 • Ambika. K - bangalore,இந்தியா

  ராஜதர்மத்தை மீறி விட்டார் மோடி ஹை தெலுகு சினிமா பேர் மாதிரி irukkiradhu

 • rajan. - kerala,இந்தியா

  பாருடா இவர்கள் ராஜ தர்மத்தை பத்தி எல்லாம் பேசுறாங்க.

Advertisement