Advertisement

பட்ஜெட்டா அல்லது தேர்தல் அறிக்கையா? லோக்சபாவில் தம்பிதுரை விளாசல்

''செயல்படுத்திய எல்லா திட்டங்களுமே தோற்றுப் போய்விட்ட நிலையில், மக்களை ஏமாற்றும் வகையில், தேர்தல் அறிக்கை வெளியிடுவதை போல, மத்திய அரசு பட்ஜெட்டை தயாரித்து வெளியிட்டுள்ளது,'' என, அ.தி.மு.க., மூத்த, எம்.பி., தம்பிதுரை குற்றஞ்சாட்டினார்.

லோக்சபாவில், பட்ஜெட் விவாதத்தில், நேற்று அவர் பேசியதாவது: கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால், மிக மோசமான தோல்வியை மத்திய அரசு அடைந்துவிட்டது. பண மதிப்பிழப்பால், மக்களின் வாழ்வாதாரமே பறிபோய்
கிடக்கிறது. ஜி.எஸ்.டி., விதிப்பால் பாதிக்கப்பட்டது, உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் தான். 'துாய்மை இந்தியா' திட்டமும் தோல்வியே.

செயல்படுத்திய அனைத்து திட்டங்களுமே தோற்றுப்போனது என்றால், அது, இந்த அரசில் தான். மாநில அரசின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக காவு வாங்கும், பா.ஜ., தமிழகத்தை பெரிதும் வஞ்சித்துவிட்டது. இதே தவறை செய்து வந்த காங்கிரஸ், கடைசியில், மாநில கட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலைக்கு தற்போது வந்துவிட்டது. இதே கதி தான், பா.ஜ.,வுக்கும் நேரிடும்.

விவசாயிகளை ஏமாற்றும் வகையில், பட்ஜெட் தயாரித்துள்ளனர். அவர்களது நிலை கருதி, குறைந்தபட்சம், 12 ஆயிரம் ரூபாயாவது தராமல், 6,000 ரூபாயை தருவது சரியல்ல. ஒரு தேர்தல் அறிக்கையை, மத்திய அரசின் பட்ஜெட் எனக்கூறி, தாக்கல் செய்துள்ளனர். இத்தனை வாக்குறுதிகளை, கடந்த ஆண்டுகளில், ஏன் தரவில்லை?

'தானே' புயலில் துவங்கி, 'கஜா' புயல் வரை, தமிழகம், இயற்கை பேரிடர்களை சந்தித்தபடி இருந்தாலும், எதற்குமே மத்திய அரசு நிவாரண நிதி தரவில்லை. நிவாரண நிதியாக, இதுவரையில், ஒரு பைசா கூட தரவில்லை. இவ்வாறு தம்பிதுரை பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (70)

 • Indhuindian - Chennai,இந்தியா

  இவருக்கு நாட்டு நடப்பே தெரியாதா இல்ல அப்படி நடிக்கிறாரா? இந்த பட்ஜெட்லயே ரெண்டாயிரம் ரூவா குடுக்கறதா உங்க OPS அறிவிச்சாரே அதுக்கும் எலெக்ஷனுக்கும் சம்பந்தம் இல்லையா? இவர் எப்படியும் கட்சி மாற போறார் இவரை கட்சியே யாரும் கண்டுக்கறதில்லேய் யாரும் சீன்றதும் இல்லே அதான் இப்படி சவுண்ட் கொடுத்துக்கிட்டு இருக்கார். AIADMK -பிஜேபி கூட்டணி அறிவிப்பு வந்தவுடன் ஒரு அந்தர் பல்டி அடிச்சி காலத்தின் கட்டாயம்னு சொல்லிட்டு அறிவாலயத்தில் ஐக்யமாயிடுவார். ஆனா ஒன்னு எந்த கட்சியிலே போட்டியிட்டாலும் சரி இனிமே லோக் சபா பக்கம் போற பாக்கியம் இவருடைய ஜாதகத்துல இல்லே

 • Krish Sami - Trivandrum,இந்தியா

  சபாஷ் வனவாசம். துக்ளக் சோ கருணாநிதியின் முல்லை பெரியாறு காமெடியை வெளுத்து வாங்கி இருக்கிறார். தந்தையாலேயே தமிழனுக்கு எந்த நன்மையையும் இல்லை. இப்போது தனயன் 'வெத்து வேட்டு' ஸ்டாலினா கிழித்துவிடப்போகிறார். மக்கள் தந்தையை 2014 லில் துடைத்து எறிந்தது போல தனயனையும் 2019 லில் துடைத்தெறிய வேண்டும். பின்னர் மு க அழகிரி மீதி கதையை முடித்துவிடுவார். இரண்டு பட்ட அ இ அ தி மு க வேலையை கடுமையாக்கிவிட்டது. ஆனால், ஆர் கே நகர் தேர்தலில் தி மு க டெபாசிட் போனது ஒரு ஆறுதல். பார்க்கலாம்.

 • Manian - Chennai,இந்தியா

  அணைய போற விளக்கு இப்படிதான் அக்கட்சியில் எரியும். இவன் ஆட்டம் குளோசுதான் . இவனை அறியாமையே, இப்போ எல்லோர் மனசிலேயும் "மோடி, மோடின்னு" ஜபம் நடக்கும், அவருக்கு இலவச அட்வெர்டைச்சு. அவருக்குத்தான் ஒட்டு போவானுக. இவனுக்கு ராகுலின் வேலை ஆள் பதவி கிடைக்கும். -திருப்புர் குமரன் (நானே வேறு ஆளு, அந்த பழய குமரன் இல்லை) , மஞ்சள் துண்டு மகாதேவன் கட்சி.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  தம்பி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டாரா? இவர் சொல்வது அத்தனையும் ஏற்கனவே காங்கிரஸ் சொன்னதுதான். ஏற்கனவே பிஜேபியும் அதிமுகவும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டாக போட்டியிடுவது என்று முடிவு செய்தாயிற்று. இந்த நிலையில் இவர் ஏன் இந்த கூவு கூவுகிறார் என்று தெரிய வில்லை. இவர் சொல்வது கட்சியின் கருத்து இல்லை என்றும் சொல்லி விட்டார்கள். காங்கிரஸ் காரர்கள் இவரை நன்கு கவனித்து விட்டார்களோ?

 • Tamilselvan - Chennai,இந்தியா

  தம்பிதுரை இது வெல்லாம் ஒரு புழைப்பா?? இவ்வளவு நாள் பதவி அனுபவித்து விட்டு இப்போது கட்சி தாவ முனைகிறார் இந்த ஊமை துரை

Advertisement