Advertisement

'டவுட்' தனபாலு

மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழக பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு புதிய நம்பிக்கைய ஏற்படுத்தி உள்ளது.

டவுட் தனபாலு: தமிழக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்தினால், எதைச் சொல்லி மக்களை கவர்வதுன்னு, அ.தி.மு.க., தலைமை ரொம்ப யோசித்து வருது... இந்த நேரத்துல, 'கடனும், வருவாய் பற்றாக்குறையும் தாங்க முடியாத அளவுக்கு இருந்தால் தான், எந்த ஒரு அரசாலும், பம்பரமாய்ச் சுழல முடியும்... அந்த வகையில், அ.தி.மு.க., அரசு ஓய்வின்றி உழைக்குது'ன்னு, அடுத்த, 'பிட்'டை போட்டுடுவீங்களோ என்பது தான், என்னோட, 'டவுட்!'

***

துாத்துக்குடி வடக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர், கீதா ஜீவன்: துாத்துக்குடி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், கனிமொழி, எம்.பி., போட்டியிட உள்ளார். மத்தியில், காங்., ஆட்சி அமைக்கும்போது, அவர் மத்திய அமைச்சராக கூட வரலாம்.

டவுட் தனபாலு: அப்படியே, மீதமுள்ள, 38 தொகுதிகளுக்கு, யார் யார் வேட்பாளர்கள் என்பதை, தி.மு.க., மாவட்ட செயலர்கள் சொல்லிவிட்டால், லோக்சபா தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல், வேட்பாளர் தேர்வு போன்ற, அலைச்சல்களும், வீண் சம்பிரதாயங்களும் தேவைப்படாது என்பதில், 'டவுட்'டே இல்லை...!

***

பா.ஜ., மூத்த தலைவர், இல.கணேசன்: பா.ஜ., குறித்து, தம்பிதுரை கூறி வருவது, அவரது சொந்த கருத்து. கூட்டணி அமைந்த பின், தம்பிதுரை இது போன்ற கருத்துகளை கூறினால், அவருக்கு நாங்கள் பதில் கூறுவோம்.

டவுட் தனபாலு: கூட்டணியில் இல்லாதபோது தானே பதிலடி தரணும்... நீங்க இவ்வளவு அடக்கி வாசிப்பதைப் பார்த்தால், அ.தி.மு.க.,வின் கூட்டணிக்கு எவ்வளவு ஆசையில் இருக்கீங்க என்பது அப்பட்டமாகத் தெரியுதே... 'காரியம் ஆகும்வரை, காதையையும், வாயையும் வாடகைக்கு விட்டுடணும்'ங்கறது இது தானோ என்ற, 'டவுட்' வந்திடப் போகுது...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • karutthu - nainital,இந்தியா

    மேடம் D.அம்புஜவல்லி இந்த வால் மிரட்டல் விடாது மிரட்டலுக்கும் பயப்படாது இது என் சொந்த கருத்து அவளவுதான்

  • karutthu - nainital,இந்தியா

    மீண்டும் தமிழ் நாட்டிற்கு ஒரு பெண் முதல்வர் வருவதென்றால் அது கனிமொழி தான் . ஆகவே கனிமொழி எம் எல் எ பதவிக்கு போட்டிடவேண்டும் .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    திமுகவில் தலை இன்னும் ஆதாரபூர்வமாக வாய் திறக்குமுன்னே வால் ஆடுகிறதே ஒருவேளை வால் மூலமாக மறைமுக மிரட்டல் ஏதாவது கிளம்பியிருக்குமோ ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement