Advertisement

டுவிட்டர் சி.இ.ஓ.,க்கு காலக்கெடு நீட்டிப்பு

புதுடில்லி: பார்லி., குழு முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராகும் படி டுவிட்டர் சிஇஓ.,க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஜராகாத நிலையில் மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், சமூக வலைத்தளங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 7ம் தேதி(பிப்.,7) நடைபெறும் என்றும், அதில் பங்கேற்கும்படி, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் சிஇஓ.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 1ம் தேதி அந்நிறுவனங்களுக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.


ஆனால் குறுகிய கால இடைவெளி மட்டுமே இருப்பதால், ஆலோசனை கூட்டத்தில் டுவிட்டரின் சி.இ.ஓ., பங்கேற்க முடியாது எனவும், காலக்கெடுவை நீட்டிக்கும்படியும் அந்நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற பார்லி., குழு 11ம் தேதி வரை நீட்டித்தது.


இந்நிலையில் இன்று(பிப்.,11) டுவிட்டரில் பணியாற்றும் அதிகாரிகள் குழு ஒன்றை ஆலோசனைக் கூட்டத்திற்கு அந்நிறுவனம் அனுப்பி வைத்தது. இக்குழுவை பார்லி., குழு தலைவர் அனுராக் தாகூர் சந்திக்க மறுப்பு தெரிவித்தார்.. மேலும், அடுத்த 15 நாட்களுக்குள்(பிப்.,25ம் தேதிக்குள்) டுவிட்டர் சி.இ.ஓ., ஜாக் டோர்சே, பார்லி., குழு முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Narayanan Sklaxmi - chennai,இந்தியா

    ஏன் குழு வந்து மீட்டிங்கை நடத்தினால் என்ன? ஏன் சந்திக்கமுடியாது என்று கூறவேண்டும், பேரம் பேசுவதற்கு நிறுவனர் தான் வரவேண்டுமா.

  • nicolethomson - bengalooru,இந்தியா

    ஜாக் க்கு ராகுல் பெர்மிஷன் கிடைக்கலை அதான் அவன் வரவில்லை

  • nicolethomson - bengalooru,இந்தியா

    அப்போ முகநூல் நிலை என்ன?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    கோமாளி மத்திய தகவல் துறை அமைச்சருக்கு ஆர்டர்ஸ் போட்டுட்டார். மத்திய அரசு நிறுவனங்களை ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்க சொல்லி சர்க்குலர் போட்டது மத்திய அரசு. எல்லா ஆபீசர்களையும் ட்விட்டர் கணக்கு துவங்கச் சொல்லி வற்புறுத்தியது. அதில் அரசுக்கு துதிபாடும் ஆபீசர்களுக்கு தனி கவனிப்பும் கிடைக்கிறது. இப்போது பொதுமக்கள் இதன் மூலம் முகத்திரையை கிழிக்க ஆரம்பித்ததும் ஊத்தி மூடப் பார்க்கிறது. முயலட்டும். சட்ட பூர்வமாக தடை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை

  • கோமாளி - erode,இந்தியா

    பாராளமன்ற குழுவின் முன் ஆஜராகும் வரை ட்விட்டரை தடை செய்யவும்

Advertisement