Advertisement

முன்பை விட அதிக நிதி; தம்பிதுரைக்கு கோயல் பதில்

புதுடில்லி : ஜி.எஸ்.டி., மூலம் கிடைக்கும் வரிப்பணத்தை, முன்பை விட அதிகமாக மாநிலங்களுக்கு பகிர்வு செய்வதாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்.பி.,யும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, ஜி.எஸ்.டி., மூலம் அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக் கொள்வதாகவும், தங்களின் நிதிக்காக மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததாவது: ஜி.எஸ்.டி., மூலம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., மூலம் அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக தம்பிதுரை புரிந்து கொள்ளக் கூடாது. நிதிக்காக மத்திய அரசிடம் மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுதாக கூறுவதும் தவறு. முன்பை விட தற்போது அதிக நிதி பகிர்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • karthik - ,

  அண்ணாதுரைக்கு பிறகு முதல்வர் தம்பிதுரை ஆகாததற்கு காரணம் இந்த ஓட்டை வாய்தான்

  • Karunan - udumalpet,இந்தியா

   ஓட்டை வாய்தான் என்று சொல்கிறீர் என்ன தவறாய் பேசிவிட்டார் அவருடைய வார்த்தைகளில் சத்திய ஆவேசம் அல்லவா தெறிக்கிறது

 • J.Isaac - bangalore,இந்தியா

  அதனால் தான் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட வேண்டிய திட்டங்களுக்கெல்லாம் பிரதமர் வருகிறார் . தேர்தலுக்காக அவசரமாக அடிக்கல் நாட்டுகிற திட்டங்கள் எல்லாம் நாடகமே

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தங்களின் நிதிக்காக மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்..... ஆனால் யாராவது ஒரு தற்கால அரசியல்வாதி பிச்சை எடுக்கிறான் என்று சொல்லுங்கள்...? ...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தங்களின் நிதிக்காக மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ...நீங்கள் எல்லோரும் மக்கள் வரிப்பணத்தை சுரண்டி வளமான வாழ்க்கை வாழ்கிறீர்கள்... மக்கள்தான் உங்களுக்கு வசதி .பணம் பதவியயை பிச்சை இட்டுவிட்டு அவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்

 • appaatakkar - kosavapatti,இந்தியா

  நாடக கம்பெனி

 • Karunan - udumalpet,இந்தியா

  தம்பிதுரை கூற்றை முழுவதையும் ஏற்று கொள்ளத்தான் வேண்டும் ...மாநிலங்கள் தங்கள் நிதி ஆதாரத்தை பெருக்கிக்கொள்ளும் வழிகளையெல்லாம் மத்திக்கு தந்துவிட்டு இப்பொழுது முழித்துக் கொண்டிருக்கின்றன .. GSTikku பெருமளவு பங்களிப்பு செய்யும் தமிழகம் போன்ற மாநிலங்கள் கேரளா போன்ற ஊதாரி மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு கைபிசைந்து நிட்கின்றன ..ஜெயலலிதா எதிர்த்த காரணம் இப்பொழுதுதான் மற்றவர்களுக்கு புரிந்திருக்கும் ..திரும்பவும் பழைய முறைக்கு திரும்புவதுதான் இந்த சிக்கலிலிருந்து தப்பிக்கமுடியும் ...கும்பமேளாவில் கும்பிக்கும் அத்தனை பணமும் இங்கிருந்து செல்வதுதான் ..உத்திரப்பிரதேசத்து நோஞ்சான் அரசால் இவ்வ்வளுவு செலவு செய்யமுடியுமா ..சந்திரபாபு இப்பொழுது ஞானம் பெற்றுவிட்டார் ...பகாசுர கொள்ளையர்கள்.. திராவிட கொள்ளையர்களை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ..பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ ?

  • Saravanan - Chennai,இந்தியா

   ஜீ எஸ் டி வருவதற்கு முன்பே தமிழ்நாடு கடனில் தான் தத்தளித்து கொண்டு தான் இருந்தது. கனரக வாகனங்கள் மாநில எல்லை தாண்டும் போது என்றுமே வரி சரியாக கட்டியதில்லை. காரணம் பல மாநிலங்களை கடந்து சரியாக வரி கட்டினால் பொருளின் விலை பல மடங்கு கூடும். ஜீ எஸ் டி வந்த பின் இந்நிலை மாறியது. மாநில ஜீ எஸ் டி மூலம் வருவாய் வருவதை சசியின் அடிமை மறந்து விட்டார் போலும். கடந்த 49 வருடமாக ஒரு அணையும் தமிழகத்தில் கட்ட படவில்லை. MGR முதல்வராக இருந்தபோது தூர் வாரப்பட்ட ஏரிகள் இந்த ஆட்சியில் தான் கரிசல் மண்ணை விவசாயிகளுக்கு கொடுக்க முன் வந்துள்ளது.

  • Karunan - udumalpet,இந்தியா

   வருவாய் குறைந்துவிட்டது அன்பரே வருவாய் பெருக்கும் வழிகள் அடைபட்டுவிட்டன ...எங்களிடம் வாங்கிய பணத்தை எங்களுக்கு தருவதில் என்ன கால தாமதம்….

 • சீனு, கூடுவாஞ்சேரி - ,

  தம்பிதுரை அதிமுகவில் தான் தான் நம்பர் ஒன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் எடப்பாடி நிலைமையை திறமையாக கையாளுவதால் அவருக்கு சங்கடம். பாஜாகவை எதிர்ப்பதும் இந்த காரணத்திற்கு தான். எடப்பாடிக்கு ஏதாவது இடையூறு ஏற்படுத்தி தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்ற காயை நகர்த்துகிறார். தோல்வி அடையப்போவது தம்பிதுரையாகத் தான் இருக்கும். இதே நிலை தொடர்ந்தால் அவரது எம்பி பதவியை வரும் தேர்தலில் இழக்க நேரிடும்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இந்த அரைவேக்காடு தம்பிதுரை இக்கெல்லாம் அறிவாளிகள் பாகில் சொல்லும் கட்டாயம்? ம் ,என்ன சொல்ல காலத்தின் கோலத்தை ?சசியின் உடன் பிறவா சகோதரர் மாதிரி அவரை வரிந்து கட்டிக்கொண்ட புண்ணியவான் அல்லவா இவர், இவர் அதிமுகவின் சாபக்கேடு.

 • blocked user - blocked,மயோட்

  முன்னரை விட மக்களுக்கு வரிச்சுமை குறைவு... ஆனால் முன்னரை விட அதிக கெடுபிடி என்பதால் வருமானம் அதிகமாகவே வரும்... இதில் அதிகம் மாநிலங்களுக்கே கொடுக்கப்படுகிறது...

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  நானறிந்தவரையில், தம்பிதுரை, தேர்வெழுத செல்லும் மாணவன் தேர்வெழுத தன்னை நன்றாக படித்தபின் செல்வதை விடுத்து தேர்வெழுதும் நிலையத்தை அடைவதுபோல் மக்களவையில் தன் மனக்குமுறலை வெளிப்படுத்துவதுபோல் தான் தெரிகிறது. இவரின் அரசியல் பயணம் முடியும் தருவாயில் இருக்கக்கூடுமோ?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு லிமிட் ம. அரசு தன்னிச்சையாக போட்டு வைத்திருக்கிறது. அதைக்கூட ஒழுங்காக தருவதில்லை. சொன்னால் கோபம் மட்டும் வருகிறது.

 • kalyanasundaram - ottawa,கனடா

  he will not be able to suck funds for his use hence this drama

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  தம்பிதுரையின் புண்ணியத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வந்து விடும் போலுள்ளதே. தமிழக எதிர் கட்சிகளுக்கு ஒரு போராட்ட வாய்ப்பு கிடைக்க வழி இல்லையோ.

 • ஆப்பு -

  இவ்வளவு நாளாக இல்லாத தாராளம் எங்கேருந்து வந்தது? ஏதாவது புதையல் எடுத்தீரா? இல்லே 150 லட்சம் கோடி கருப்பு பணம் வெளீல கொணாந்துட்டீங்களா? இல்லே தேர்தல் ஜுரம் 290 டிகிரிய தாண்டிடிச்சா!

  • Cheran Perumal - Radhapuram

   அதே தேர்தலுக்காகத் தானே தம்பிதுரை தமிழகத்துக்கு நிதி கிடைக்கவில்லை என்கிறார். இரண்டுபேரும் புள்ளிவிவரத்தோடு பேசினால் விவரம் வெளிவந்து உமக்கு ஆப்பு வைத்துவிடலாம்.

  • Sanny - sydney

   தேர்தலில் தங்களுக்கு ஆப்பு வராமல் இருக்க, வந்த பணம், இன்னும் வரும்.

 • ravisankar K - chennai,இந்தியா

  இவ்வளவு நாட்களாக எடுக்காத பிச்சையை தம்பி துரை இப்போது தேர்தல் நேரத்தில் எடுக்க காரணம் என்ன? தமிழக முதல்வர் ஆக முடியவில்லை, அடுத்து தொகுதியில் செந்தில் பாலாஜி கவிழ்த்து விட தயாராக உள்ளார். அ தி மு க மதிப்பதில்லை. எங்கு சென்றாலும் தொகுதியில் இவ்வளவு நாட்களாக எங்கே சென்றாய் என்று மக்கள் கேள்வி. அதனால் இப்போது இவருக்கு தமிழ் நாடு நிதி நிலைமை ஞாபகம் வந்து விட்டது ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement