Advertisement

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் சீட் பெறுவதற்கு, ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், காங்., தலைவர்கள் பலர் நொந்துபோய் உள்ளனர்.

ஏற்கனவே மாநிலத்திற்கேற்ப, சீட் பெறுவதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீட் கிடைக்கும் என்பது உறுதி இல்லை என்பதால், இவ்வளவு பணத்தை கட்டுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

புதிய விதிமுறை :
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளவர்களும், எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கும் சீட் கிடையாது என்பதே ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறை. அதே போல ஏற்கனவே எம்.பி.,யாகவோ எம்.எல்.ஏ.,வாகவோ இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் சீட் தர வேண்டாம் என் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், சட்டசபை குழு தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே நல்ல பதவியில் உள்ளவர்களே மகனுக்கோ மகளுக்கோ சீட் பெறும் மும்முரத்தில் இருக்கின்றனர். இது ராகுலுக்கு கடுப்பை கிளப்பி உள்ளது. இதனாலேயே இதுபோன்ற உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார் என்கிறார்கள். இதனால் திக்விஜய், கபில் சிபல், தற்போது ம.பி., முதல்வராக உள்ள கமல்நாத் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்ப ஆட்களுக்கு சீட் பெற முடியாமல் இவர்கள் கையை பிசைகின்றனர்.

ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த தேர்தலில் பிரசாரம் செய்த ராகுல், தேர்தலுக்கு முன்பு கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் தரப்பட மாட்டாது என்று பேசினார். அதையே இப்போது விதிமுறையாக்கி விட்டார்.

தொகுதிக்கு 3 பேர்இதற்கிடையே, பிப்.25ம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள 3 பெயர்களை பரிந்துரைக்குமாறு அந்தந்த மாநில தலைவர்களுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதத்திற்குள் வேட்பாளர்களின் பெயர்களை ராகுல் இறுதி செய்வார் என்கிறார்கள்.அதற்கு முன், தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் பெயர்களை போனிலோ எஸ்.எம்.எஸ்.,களாகவோ தெரிவிக்குமாறு கீழ்மட்ட தொண்டர்களை ராகுல் கேட்டுக்கொள்வார் என கூறப்படுகிறது. இதை வைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பட்டியலில் இருந்து மீண்டும் அதிக ஆதரவுள்ள 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பட்டியல் அகில இந்திய காங்., கமிட்டியால் நியமிக்கப்படும் ஆய்வு குழு முன்பு வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.

கட்டணம் அதிகம்

சீட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணத்தையும் ‛விர்' என உயர்த்தப்பட்டுள்ளது. இமாச்சலில் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.50 ஆயிரம் எனவும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.35 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014 தேர்தலில் இது ரூ.25 ஆயிரமாக மட்டுமே இருந்தது. பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கரில் இது ரூ.35 ஆயிரமாகவும், ரூ.25 ஆயிரமாகவும் உள்ளது.சமீபத்தில் முடிந்த ம.பி., சட்டசபை தேர்தலில் கூட விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டது. கட்சி கமிட்டியின் முக்கிய உறுப்பினரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் கூறும்போது, ‛‛கட்சிக்கு நிதி தான் பெரும் பிரச்னையாக இருக்கிறது''என்று கூறி இருந்தார். இதனாலேயே விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (42)

 • prem - Madurai ,இந்தியா

  இதுதான் இந்த நேரு குடும்பத்தின் அவலட்சணம்.... உபதேசம் எல்லாம் ஊருக்கு.... தனக்கு என்ன வந்தது....... பப்பு குடும்பம் தான் உசத்தி.... மற்றவனெல்லாம் மண்ணாங்கட்டி... இதெல்லாம் ஒரு கட்சி... இதுக்கு ஒரு தொண்டன் ...

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  உறவினர்களுக்கு சீட் பெறக்கூடாது. இவர் மட்டும் விதி விலக்கா - பிரியங்காவை கொண்டுவரலாமா உயர் பதவிக்கு. மற்றவர்களுக்கு குடும்ப ஆட்சி கூடாது ஆனால் தன் குடும்பத்துக்கு அது கிடையாது. இதுதான் காங்கிரஸ் ஜனநாயகம். பாவம் மகாத்மா காந்தி - இன்று இருந்தால் இவைகளை பார்த்து நொந்துபோயிருப்பார் ஏன் காங்கிரஸ் என்ற பெயரில் சுதந்திரம் வாங்கினோம் என்று.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பாஜக இன்னும் ஆரம்பிக்க வில்லை. ஆரம்பிக்க பயம். யாரும் விண்ணப்பிக்காவிட்டால் என்ன செய்வது என்று பயம். ஏற்கனவே சுஷ்மா மற்றும் சில தலைவர்கள் கழட்டி கொண்டு விட்டார்கள். சொன்னால் இது பத்தி நீ பேசாதே என்பார்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ராகுல் காந்தி யின் விதிமுறைகளால் பாஜக வாசகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டார்கள். ஏன்? அதிமுக கூட விண்ணப்ப கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கிறார்கள். இதே பத்திரிகை யில் வந்தது. அதுபற்றி இவர்கள் வாயே திறக்க வில்லை. பயம்.. கூட்டணியில் சேர்க்கலைன்னா? ஆனால் திமுகவை சம்பந்தப்படுத்தி சிலர் ப்ராம்ப்டாக எழுதியிருக்கிறார்கள். திமுக இல்லாமல் இவர்களுக்கு பொழப்பே கிடையாது. போல.

 • Changes - Pkt,இந்தியா

  கொள்ளை அடித்த பணத்தை தைரியமாக எடுத்து செலவு செய்ய முடியல, சிபிஐ & ஐடி ரெய்டு வருது. அதுக்கு போரட்டம், தர்ணா செய்ய வேண்டி இருக்கு அதுக்கு இருக்கிற காசு செலவு செய்யவேண்டி இருக்கு. அதனால இப்படி அடிமைகள்கிட்ட பிடிங்கி வாழ்க்கையை என்ஜோய் செய்ய வேண்டியதுதான். கக் கக் க போ

Advertisement