Advertisement

அரசியலை தொடர்ந்து டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா

புதுடில்லி: சமீபத்தில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, இன்று (பிப்.,11) முறைப்படி டுவிட்டரிலும் இணைந்துள்ளார்.உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பிரியங்கா, லக்னோவில் இன்று முதல் முறையாக பிரசாரத்தை துவக்கினார். சகோதரரும், காங்., தலைவருமான ராகுலுடன் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரியங்கா பிரசாரம் செய்தார். இவருக்கு நூற்றுக்கணக்கான காங்., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தை துவக்கி அதே சமயத்தில், அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை பிரியங்கா துவக்கி உள்ளார். பிரியங்கா டுவிட்டரில் இணைந்துள்ளதாக காங்., கட்சியின் மைக்ரோ பிளாக் பக்கத்தில் காலை 11.49 மணியளவில் தகவல் பதிவிடப்பட்டது. அடுத்த 15 நிமிடங்களில் பிரியங்காவை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5000 ஐ எட்டியது. ஒரு மணி நேரத்தில் பிரியங்காவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ கடந்தது. தற்போது (பகல் 2 மணி நிலவரம்) பிரியங்காவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 46000 ஐ கடந்துள்ளது.

பிரியங்கா யாரை பின்தொடர்கிறார்டுவிட்டரில் பிரியங்காவை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்தாலும், அவர் குறிப்பிட 7 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். தனது சகோதரர் ராகுல் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, அகமது பட்டேல், அசோக் கெலட், சச்சின் பைலட், காங்., கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் ஆகியவற்றை மட்டுமே பிரியங்கா பின்தொடர்கிறார். ராகுல் 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரில் இணைந்தார். அவரை இதுவரை 8 லட்சத்து 47 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • Madhavan Komal -

  ராகுல் காந்திய பின் தொடர்வது 8.4 மில்லியன் பாலோவர்ஸ் 8.4 லட்சம்னு தப்பா போட்டுறிக்கிங்க

 • Viswam , Mumbai -

  அடி மட்ட தொண்டன் அளவுக்குகூட அரசியல் ஞானம் இல்லாத நேரு கொள்ளு பேத்திய கால கைய புடிச்சு காங்கிரஸ காப்பாத்தனும் கெஞ்சி நேரடியாக கிழக்கு உபியோட ஜனரல் செகரட்டிரியா போட்டு, சொட்டர், டீவிட்டர் எல்லாம் கையில் கொடுத்து, சும்மா அதிருது இல்ல உதறுது இல்ல, அந்த பயம் இருக்கனும், இப்படி எல்லாம் கருத்து போட்டு மனசை தேத்துற நிலை. அடிமைத்தனம் காங்கிரஸ் இரத்ததில் ஊறவைத்து பல வருஷம் ஆகி போச்சு.

 • mindum vasantham - madurai,இந்தியா

  நான் மோடி ஆதரவாளன் ஆனால் ராகுல் காந்தி சமாஜ்வாதி , சரத் பவார் , ஜாட் கட்சி , விடுதலை சிறுத்தை சீனியர் ராமடோஸ் இவர்களை விட சிறந்தவர்

 • Kannan - madras,இந்தியா

  கான் கிராஸ் கட்சிசுக்கு ஓட்டு போடுபவர்கள் சோற்றால் அடித்த முட்டாள்கள்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  டீ விற்றவனுக்கு எச்சல் டீ கிளாஸை கழுவக்கொடுங்கள் பிரதமர் பதவியை அல்ல என சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு ரிபப்ளிக், டைம்ஸ் நவ் போன்ற ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு மணி நேரத்துக்குப்பின் அந்த பேனர்கள் நீக்கப்பட்டாலும் சந்திரபாபு நாயுடு அதில் தவறேதுமில்லை என்பதாலும் மம்தா,கேஜரிவால் மற்றும் திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் அதை ஆதரித்துப் பேசியதாலும் பதட்டம் மோதி தான் டீ விற்றவர் எனக் கூறிக்கொள்ள வெட்கப்படவில்லை. அதேபோல டீக்கடை நடத்துவதோ அங்கு எச்சல் கிளாசு கழுவுவதோ ஏதும் அவமானப் படக்கூடிய தொழில் ஒன்றுமில்லை. இந்த மோதி எதிரிகள் எல்லாம் அரசியலுக்கு வருமுன் ஏதேனும் கவுரவமான தொழில் செய்து உழைத்துப் பிழைத்தவர்களா ??

Advertisement