Advertisement

செல்லும் இடமெல்லாம் மோடி பொய்: ராகுல்

புதுடில்லி : பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் பொய் பேசி வருவதாக காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டில்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை துவக்கினார். காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்., மஜித் மேமன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பேசிய ராகுல், நான் ஆந்திர மக்கள் பக்கமே நிற்பேன். ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற தவறிவிட்டார். எப்படிப்பட்ட பிரதமர் இவர். செல்லும் இடமெல்லாம் பொய் பேசும் பிரதமர் மோடி, நம்பகத்தன்மையை இழந்து விட்டார் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாதுகாப்பு துறையின் ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் ஊழல் எதிர்ப்பு விதிகள் உள்ளன. இந்த விதிகளை பிரதமர் நீக்கி உள்ளது ஆங்கில செய்தி ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பெரிய திருட்டுக்கு பிரதமர் வழிவகுத்து கொடுத்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (37)

  • Ganesan Madurai -

    விரக்தியின் உச்சத்தில்.

  • Solvathellam Unmai - Chennai,இந்தியா

    Yes, TRUE

  • Pachiappan - bengaluru,இந்தியா

    அடடா... திருடிட்டு ஓடும் போது வழியெல்லாம் "திருடன்... திருடன்"னு கத்திட்டே ஓடுனானாம் அந்த திருடன். அந்த கதையால்ல இருக்கு. பொய்யோட முழு உருவமா, வாயில வர்ரதெல்லாம் பொய்யே பேசி இந்த நாட்டுக்கு நல்லது நடக்கறதுக்கு முட்டுக்கட்டை போடுறது இந்த பப்புதான். மத்தவங்கள பார்த்து பொங்குறது கேவலம்.

  • Thirumal Kumaresan - singapore,இந்தியா

    நீ ஒரு கோமாளி ஒரு மாநிலத்துக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுத்து காசுமீரை சீரழித்தது போதாதா

  • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

    அவசர கோலத்தில் பதவி ஆசை பிடித்து ஒன்றிணைந்த ஆந்திராவை பிரித்து சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தலைமை செயலகத்தை பாக பிரிவினை செய்து அத்தனைக்கும் காரணம் காங்கிரஸ்...காங்கிரஸ்...காங்கிரஸ் மட்டுமே

Advertisement