Advertisement

ஏழை குடும்பத்துக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை: முதல்வர்

சென்னை : தமிழகம் முழுவதும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டசபையில் இன்று (பிப்.,11) 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், தமிழகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (57)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    ஹிந்து விரோத ரௌடிகள் கட்சி திமுகவும், சுடலையின் கூலிப்படை தலைவன் சைக்கோவும் கருப்பு கலர் பலூன் ஊதியே சாகப்போராங்க பாருங்களேன்.

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    உதவாக்கரை பட்ஜெட் என்று கூறிய கோமாளி காமெடியன் ஸ்டாலினுக்கு இந்த ரூபாய் 2000 அறிவிப்பு தலைவலி மற்றும் சம்மட்டி அடியே

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    2019 -2020 வருட கடன் நிலுவைத்தொகை 3,97 495.96 கோடி. இது கடந்த ஆண்டைவிட 41,651.96 கோடி அதிகம். .

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தருசா போங்க...

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    "....சிறப்பு உதவித்தொகை" - ஏன்..., கொள்ளெயடிச்சி வெச்சிருக்கற ஓங்க கச்சி நிதிலேந்து குடுவேன்... ஆரு வேண்டாங்கா...?

Advertisement