Advertisement

ரபேல் விவகாரம் : சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்

புதுடில்லி : சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கைத்துறையின் ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தனது அறிக்கையை மத்திய அரசிடம் இன்று (பிப்.,11) தாக்கல் செய்ய உள்ளது.ரூ.59,000 கோடி மதிப்புடைய ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கூடுதல் விலைக்கு விமானங்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ரபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக வெளியிட வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி இன்று தாக்கல் செய்ய உள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்ததும், அந்த அறிக்கை ஜனாதிபதிக்கும், நிதியமைச்சகத்திற்கும் பிரதி அனுப்பப்படும். தொடர்ந்து பார்லி.,யில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதி, நேரம் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த அறிக்கை பொது கணக்குக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது பொது கணக்கு குழுவின் தலைவராக காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • hariharan - coimbatore,இந்தியா

    C A G is also like judiciary, they have blind rules, they cant interfere in policy decision of govt. they have no measurement of visionary procedures. they will evaluate on basis of spent and received

  • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

    மோடிக்கு சாதகமாக இருக்கும் ஒரு பொய் அறிக்கை அவ்வளவுதானே.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    தெரிந்ததுதானே..

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    இந்த அறிக்கை பிஜேபிக்கு சாதகமாக வந்தாலும் கூவுவார்கள் , பாதகமாக வந்தாலும் கூவுவார்கள். அவர்கள் கூவலேல்லாம் தேர்தலில் தோற்றபிறகுதான் ஓயும்.

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    இந்த சி ஏ ஜி கமிட்டியின் தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே , இவர்தான் சி பி ஐ தலைவரை நியமிக்க பெரும் தடை செய்தார். இனி முடிவுகள் எப்படி வரும் என்று நமக்கு தெரியும்.

  • makkal neethi - sel,இந்தியா

    காசில்லா தேர்தல் விளம்பரம்

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    CAG Auditor also involved in Rafel deal is the latest allegation appeared in other media.

    • E.V. SRENIVASAN - Muscat,ஓமன்

      ஆமாம் திரு G . பிரபாகரன் (வேண்டுமானால் ப. சிதம்பரம், ராகுல்) இவர்களை தவிர எல்லோரும் ரபேல் விமானம் வாங்கியுள்ளதில் உள்ள ஊழலில் பங்கு உண்டு. நம்புங்கள் மக்களே

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    புலி வருது ... புலி வருது ...

    • E.V. SRENIVASAN - Muscat,ஓமன்

      கரை படியாத சிங்கத்திடம், புலி (புளி) வந்து என்ன செய்யபோகுது? உண்மையறிந்து ஓடி போகப் போகிறது. குறைந்த பட்சம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்களின் உளறலை கேட்க வேண்டி இருக்காதல்லவா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement