Advertisement

பிரதமரை எச்சரிக்கிறேன் : சந்திரபாபு நாயுடு பேச்சு

புதுடில்லி : தனிநபர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என பிரதமரை எச்சரிக்கிறேன் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டில்லி ஆந்திர பவனில் 12 மணி நேர உண்ணாவிரத மற்றும் தர்ணா போராட்டத்தை ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று(பிப்.,11) காலை துவக்கி உள்ளார். உண்ணாவிரத போராட்டத்தின் போது அங்கு திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் முன் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுக்கு எதிராக இன்று இந்த போராட்டம் நடக்கிறது. தர்ணா நடப்பதற்கு ஒருநாள் முன்பாக, நேற்று பிரதமர் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு சென்றுள்ளார். எங்களது கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றாவிட்டால், அதை எப்படி பெறுவது என எங்களுக்கு தெரியும்.

இது ஆந்திர மக்களின் சுய மரியாதை சம்பந்தப்பட்டது. எங்களது சுயமரியாதை மீது எந்த விதத்திலாவது நீங்கள் தாக்குதல் நடத்த நினைத்தால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். தனிநபர் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்த அரசை, குறிப்பாக பிரதமரை எச்சரிக்கிறேன் என்றார். டில்லியில் போராட்டம் நடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து 2 ரயில்களில் டில்லிக்கு போராட்டக்காரர்களை அழைத்துச் சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. இந்த போராட்டத்திற்காக கோடிக்கணக்கான பணம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆந்திர பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  மற்ற மாநிலங்களை விட அதிகபட்சமாக நாற்பத்துஇரண்டு சதவிகித நிதியை பெரும் மாநிலம் ஆந்திரம். இதற்கு மேல் இவர்களுக்கு இன்னும் என்ன வேண்டுமாம்?

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  ட்ரெயின்ல போனவங்க பிளேன்ல திரும்பி வருவார்களா .. இல்ல அந்த ட்ரெயின் தங்கி திரும்ப கூட்டிக்கிட்டு வருமா ..

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஒன்றை மக்கள் கவனிக்க வேண்டும். மம்தாவை பார்த்து விட்டு வந்த பின் இவரும் ஜாஸ்தி ஆடுகிறார், ஸ்டாலினும் எடப்பாடி யை விட்டுவிட்டு மோடியை மட்டுமே விமர்சிக்கிறார். இவர்களுக்குள் பணப்போக்குவரத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. நாட்டில் மாநிலங்களில் மாநிலக்கட்சிகளே வர வேண்டும் என்று இவர்கள் கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் தேசியக்கட்சிகளையே தாக்குகிறார்கள் ஏன்? இவர்கள் விமர்சிக்க வேண்டியது இவர்களின் எதிரிகளான மாநிலக் கட்சிகளை மட்டுமே அல்லவா? இவ்வாறு தேசிய நலனுக்கு எதிராகவும் மஜுரிட்டி ஹிந்துக்களுக்கெதிராகவும் உள்ள திமுக கண்டிப்பாக ஓழிக்கப்படவேண்டிய கூட்டமே.

 • நக்கல் -

  கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று தேர்தலுக்குப்பின் எதிர்கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றவனை பார்த்து சொல்லப் போகிறார்கள்..

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ஆத்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து தந்தால், அதற்க்கு தொழில் தொடங்குவதற்கு பலவிதமான சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும். அப்படி சலுகைகள் கொடுத்தால், தமிழகம், கன்னடம் ஆகிய மாநிலங்களில் இருந்து பல தொழில்கள் ஆந்திராவுக்கு இடமாறும். ஆதலால் தமிழகமும் மற்ற தென் மாநிலங்களும் பாதிப்படையும். இதை உத்தேசித்தே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை. மற்றவர்களை கெடுத்து ஆந்திரம் மட்டும் வளர வேண்டுமா? நாய்டுவுக்கு ஆந்திராவை மட்டும் கவனித்தால் போதும். ஆனால் மோடிக்கு அகில இந்தியாவையும் கவனிக்க வேண்டும் அல்லவா. அதனால்தான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வில்லை. ஆனால் பலவகைகளில் நிதி ஆதாரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதே அதற்க்கு நாயுடு பதில் சொல்ல வில்லையே, ஏன்? ஆதலால் தப்பு நாயுடு மேல்தான். மோடி மேல் அல்ல.

Advertisement