Advertisement

நிறைவேறிய எதிர்பார்ப்பு!தொழிலாளர், தொழில் துறையினர் மகிழ்ச்சி

திருப்பூர்:திருப்பூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்; இதன்மூலம், திருப்பூர் தொழிலாளர், தொழில் முனைவோரின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு மூலம், உலகளவில் புகழ் பெற்றுள்ளது திருப்பூர். இத்துறை சார்ந்து, ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி; 18 ஆயிரம் கோடி மதிப்பில், உள்நாட்டு வர்த்தகம் நடக்கிறது.வர்த்தக வளர்ச்சி மற்றும் அதிகளவு வேலை வாய்ப்பு மிகுந்த திருப்பூரில், இ.எஸ்.ஐ., மருத்துவ மனை இல்லை. கடந்த 2011ல், பூண்டி ரிங் ரோட்டில் மருத்துவமனை கட்ட, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. கடந்த 2012ல், சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது; மருத்துவமனை கட்டுமானப்பணி நடக்கவில்லை.மருத்துவமனை கட்டுவதில் ஏற்பட்ட தொடர் இழுபறியால், பல லட்சம் தொழிலாளர்கள், மருத்துவ வசதி பெற முடியாமல் தவிக்கின்றனர்; சிகிச்சைக்கு, கோவை மருத்துவமனையை நாடும் நிலை ஏற்பட்டது.'ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில், மருத்துவமனை கட்ட வேண் டும்' என, தொழிலாளர்கள், தொழில் அமைப்பினர், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்; இருப்பினும், அதற்கான ஆக்கப்பூர்வ முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.இந்நிலையில், நேற்று, பெருமாநல்லுாரில் நடந்த அரசு விழாவில், பிரதமர் மோடி, திருப்பூரில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட, வீடியோ கான்பிரன்சிங் முறையில் அடிக்கல் நாட்டினார்.இதன் மூலம், மருத்துவ மனை கட்டுவதில் ஏற்பட்டு வந்த இழுபறி விலகியது. ஏற்கனவே, தேர்வு செய்யப்பட்ட அதே பூண்டி ரிங் ரோட்டில், 75 கோடி ரூபாய் மதிப்பில், 100 படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
மருத்துவமனை அமைவதன் மூலம், திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள், தொழில் முனைவோரின், ஏழு ஆண்டு எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது.'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது;இ.எஸ்.ஐ., மருத்துவமனை இல்லாததால், பனியன் தொழிலாளர்கள், மருத்துவ வசதி பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பிரதமர் மோடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது, மகிழ்ச்சியளிக்கிறது.

அதே வேகத்தில், மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு, விரைவில், தொழிலாளர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர்:இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட் டியது, வரவேற்கத்தக்கது. மருத்துவமனை கட்டும் பணிகளை துரிதமாக துவக்குவது மிகவும் அவசியம். 100 படுக்கை வசதி போதாது; தற்போதைய தொழிலாளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 500 படுக்கை வசதி, நவீன நோய் கண்டறியும் கருவிகளுடன் அதிநவீன மருத்துவமனையாக கட்ட வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    திருப்பூர் தொழிலார்களின் / குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு நூறு படுக்கை மருத்துவமனை காணாது ஐநூறு படுக்கைவசதிகள் ,அதி நவீன சிகிச்சை உபகரணங்களுடன் அமைக்கவேண்டும் வெறும் அடிக்கல் கட்டிவிட்டால் போதாது உடனே திட்டத்துக்கான பணத்தை சாங்க்ஷன் செய்யணும்

Advertisement