Advertisement

மதுரை, சேலத்துக்கு ஏ.சி., பஸ்.. 'ஜில்லுனு' ஒரு பயணம்!கோடையில் இயக்குகிறது அரசு

கோவை:கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதென்றாலே தனி குஷிதான். ஆனால், சீட் கிடைக்காமல் கோடை வெப்பத்தில் வியர்வை 'நசநசக்க' பயணிப்பதை நினைக்கும்போது, போகாமலே இருந்து விடலாமா என தோன்றும். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, இந்தாண்டு கோடையில் மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு ஏ.சி., பஸ் இயக்க, எஸ்.இ.டி.சி., முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்(எஸ்.இ.டி.சி.,) சார்பில், சென்னையில் இருந்து சேலம், கோவை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என பல வகையான பஸ்கள் இயக்கப்படுகின்றன.தவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன. பராமரிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால், அரசு பஸ்களை பயணிகள் தவிர்க்கின்றனர்.இதனால் ஏ.சி., ஸ்லீப்பர், ஏ.சி., சீட்டர் பஸ் என பலவித ஏ.சி., பஸ்களை கழிப்பிட வசதியுடன், எஸ்.இ.டி.சி., கடந்தாண்டு அறிமுகம் செய்தது.கோவையிலிருந்து பெங்களூருவுக்கு இரவு, 8:30, 9:00, 9:15, 9:45, 10:00 மணிக்கும், சென்னைக்கு இரவு, 9:00, 10:00 மணிக்கும், ஏ.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோவை வழியாக அண்டைய மாநிலங்களுக்கும், ஏ.சி., பஸ்கள் சென்று வருகின்றன.பயணிகளிடம் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், கோவையில் இருந்து கரூருக்கு மாலை, 5:30, 9:00, 10:00 மணிக்கு ஏ.சி பஸ்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பஸ்களில் உடனுக்குடன் இடங்கள் நிரம்புவதால், கோவையிலிருந்து சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு, புதிய பஸ்களை அறிமுகம் செய்ய, எஸ்.இ.டி.சி., திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, எஸ்.இ.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, கரூருக்கு இயக்கப்படும் ஏ.சி., பஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், இந்த பஸ்களில் கழிப்பிட வசதி இல்லை. இருப்பினும் தனியார் பஸ்களின் கட்டணத்துடன் ஒப்பிடும் பயணிகள், பெரும்பாலும் அரசு ஏ.சி., பஸ்களில் பயணிக்கின்றனர்.
பண்டிகை காலங்களில் இதற்கான முன்பதிவு, உடனே முடிந்து விடுகிறது. எனவே, சென்னை, பெங்களூருக்கு கூடுதல் பஸ்களும், கோவையிலிருந்து சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு, புதிதாக ஏ.சி., பஸ்களும் கேட்டுள்ளோம்.தற்போது, 200 பஸ்களுக்கு 'பாடி' கட்டும் பணி நடந்து வருகிறது. வரும், மே மாதத்தில் கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு, இந்த பஸ்கள் இயக்கப்படலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர், இந்த முறை ஜில்லென்று பயணம் மேற்கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Siva - Aruvankadu,இந்தியா

    ஊட்டி வரும் பஸ்களை மேட்டுபாளையத்தில் நிறுத்தி விடலாம்... பஸ் இழுவை இல்லை என்று குறைந்த பயணிகளையே அனுமதிக்கிறார்ஙள்...

  • Muthu - Bangalore,இந்தியா

    மூட்டை பூச்சி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.. பொது யாவரும் ரத்தம் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.. :P

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இயக்குவதுபெரிதல்ல பராமரிப்பு முக்கியம் தனியார் பேருந்துகள் ட்ரிப் முடிந்ததும் தரவாக அணைத்து பகுதிகளும் பராமரிக்கப்பட்டு உரைகள் மாற்றப்பட்டு அடுத்த பயணத்துக்கு தயார்செய்யப்படுகிறது அரசுப்பேருந்துகள் குப்பைக்கூட பெருகுவது கிடையாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement