Advertisement

வாகன திருடன்கள் மீது பாய்ந்தது, 'குண்டாஸ்'

சென்னை:கோயம்பேடு வாகன திருடன்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன், அப்துல் ஹமீது, 42. சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவன், யோகநாதன், 40. இருவரும், கோயம்பேடு மற்றும் நெற்குன்றம் பகுதிகளில், டிராவல்ஸ் நிறுவனங்கள் முன் நிறுத்தப்பட்டு இருந்த, கார் மற்றும் வேன்களை திருடி விற்றுஉள்ளனர்.இருவரையும், ஒரு மாதத்திற்கு முன், கோயம்பேடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, 2 கார்கள் உட்பட, நான்கு வாகனங்களை மீட்டனர். கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசார் நேற்று இருவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement