Advertisement

ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை:மலேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 'ஏர் ஏஷியா' விமானம், நேற்று காலை, 7:25 மணிக்கு சென்னை வந்தது.அந்த விமானத்தில் வந்த ஒரு நபரை சோதனையிட்ட போது, அவரது காலணிக்குள் இருந்து, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement