Advertisement

மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

ராமநாதபுரம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ராமநாதபுரம், பட்டிணம்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர், கொத்தனார் ராமதாஸ், 55. இவரது மகன் விக்னேஷ்வரன், 21; டிப்ளமோ சிவில் படித்துள்ளார். 2ம் தேதி, பட்டணம்காத்தான் பைபாஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் விக்னேஷ்வரன் சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி, தலையில் காயமடைந்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, ஆறு நாட்களாக, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராமதாஸ், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். மருத்துவமனை நிர்வாகம், விக்னேஷ்வரனின் இதயம், கண், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை எடுத்து, ஆறு நபர்களுக்கு தானமாக வழங்க, ஏற்பாடு செய்தது. படிப்பறிவு இல்லாத நிலையிலும், உயிருக்கு போராடும் ஆறு பேரை காப்பாற்றிய ராமதாசை, அனைவரும் பாராட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • MaRan - chennai,இந்தியா

    சந்தேகத்தை நிவர்த்தி செய்யவேண்டும்,, மூளை சாவு என்பது செயற்கையாகவும் ஏற்படுத்தப்படலாம்,, எனவே மூளைச்சாவு என்று அறிவித்தபின் அதை உறுதி செய்ய அரசு மருத்துவ குழு முன்வரவேண்டும்,,

  • ganapathy - khartoum,சூடான்

    முதலில் இந்த விபத்தை தவிர்க்க ஹெல்மெட் அணிதல் மிதமான வேகம். Signal விதிகள் மற்றும் சாலை விதிகளை மதித்து வண்டி ஒட்டகற்று கொள்ளணும். அப்பறம் உடல் உறுப்பை தானம் பண்ணலாம்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    மூளைச்சாவு விஷயத்தில் மதுரை மருத்துவமனை பெயர் அடிக்கடி வருகிறது, எல்லாம் அந்த மதுரை மீனாக்ஷிக்குத்தான் புரியும்.

  • Boopathi Subramanian -

    தமிழ் நாட்ல இப்பெல்லாம் நிறைய மூளைச்சாவு வருது. நிறைய பேருக்கு மத்த உறுப்புகள் தேவைப்படுது போல

  • Boopathi Subramanian -

    எல்லா பாட்சும் வேலை செய்யும் போது. அதெப்படி டா மூளை மட்டும் சாகுது . உங்களுக்கு தேவைன்னா முக்கியமானவற்றை நீங்களே திட்டமிட்டு தூக்கிர்றிங்க

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அந்த தந்தைக்கு கண்ணீருடன் நன்றிசெலுத்தவேண்டும் தனது துயரத்திலும் மற்றவர்களை வாழவைத்துள்ள அவரது உள்ளம் மிகப்பெரியது வணக்கங்கள் ஐயா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement