Advertisement

அபராதத்துடன் 7 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் ஏழு லட்சம் பேர் ஜனவரியில் அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2017 - 18ம் நிதியாண்டுக்கு அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2018 ஏப்ரல் முதல் ஜூலை வரை வழங்கப்பட்டது. பின் இந்த அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது.


ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சரவரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் என்பது நடப்பு ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது.

மேலும் உரிய நேரத்தில் கணக்கு தாக்கல் செய்ய தவறினால் டிசம்பர் வரை 5000 ரூபாய்; ஜனவரி முதல் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். இதன்படி நாடு முழுவதும் ஜனவரி வரை 6.31 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2018 முடிவில் 6.24 கோடியாக இருந்தது. கடந்த மாதத்தில் மட்டும் ஏழு லட்சம் பேர் கூடுதலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.


தமிழகத்தில் 2018 டிசம்பர் முடிவில் 42.43 லட்சமாக இருந்த வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை இந்தாண்டு ஜனவரி முடிவில் 50 ஆயிரம் அதிகரித்து 42.93 லட்சமாகி உள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் 99.83 லட்சம்; குஜராத்தில் 62 லட்சம்; உத்தரபிரதேசத்தில் 56.65 லட்சம்; மேற்கு வங்கத்தில் 39.65 லட்சம்; ராஜஸ்தானில் 38.67 லட்சம் பேரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    என்ன செய்யறது வரிகட்டவேண்டிய அனைத்து செல்வந்தர்களும் அயல்நாடுகளுக்கு சென்று விட்டார்கள்.. உங்கள் மீது பரிதாபம் கொண்டு மற்றவர்கள் கட்டுகிறார்கள்

  • Manian - Chennai,இந்தியா

    அவர்களை கேடடால், அவர்கள் சொல்லும் பதில்- கந்து வட்டிக்கு கொடுத்த, அதிலே வந்த வட்டி காசைத்தானே கொடுக்குறூம். அசலுக்கு மோசமில்லையே ஏன்கிறார்கள். குடும்பத்தோட ஜெயிக்கு ஆறுமாசம் போவிங்கன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா ஒடனே செலுத்தி இருப்போம் - கந்து வட்டி கருப்பசாமி.

Advertisement