Advertisement

தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி; எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,

லோக்சபா தேர்தல் செலவுக்கு, கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், தலா, 2 கோடி ரூபாய் வசூலிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் என, அனைத்து பணிகளும், ஸ்டாலின் தலைமையில் நடந்தன. அந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட, தி.மு.க., வெற்றி பெறவில்லை.

குற்றச்சாட்டு:இதற்கு காரணம், தொழிலதிபர்களுக்கும், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களுக்கும், 'சீட்' கொடுக்கப்பட்டது தான் என, தி.மு.க.,வினரே குற்றம் சாட்டினர். ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கட்சியில் சாதாரண நிலையில் உள்ள நபருக்கு, லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்குவதுடன், தேர்தல் செலவுக்கும் பணமும் வழங்குவார். அவர் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க, கட்சியினரும், சொந்த பணத்தை செலவழிப்பர்.


உண்மையாக, தேர்தல் வேலை செய்தவர்களின் விபரத்தை, ஜெயலலிதா, உளவு பிரிவு போலீசார் வாயிலாக பெற்று, அவர்களுக்கு, வாரிய தலைவர், மாவட்ட செயலர், ராஜ்யசபா எம்.பி., போன்ற பதவிகளை வழங்குவார். அதே, 'பார்முலா'வை வரும் லோக்சபா தேர்தலில் பின்பற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், சிலவற்றில், அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற, கட்சியில் நீண்ட காலமாக உள்ள, உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.

விருப்பம்:இது போன்றவர்கள், பெரும்பாலும் பணபலம் இல்லாதவராக இருப்பதால், அவர்களுக்கான தேர்தல் செலவை, கட்சியே ஏற்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்புகிறார். எனவே, அதற்காக, தற்போது பதவியில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம், நிதி வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர், தி.மு.க.,வினருடன் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும், அரசு ஒப்பந்த பணிகள், மது கடை பார் உரிமம் எடுப்பது என, அனைத்திலும் ஆளுங்கட்சியினர் தான் ஆதிக்கம் செலுத்துவர்.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி வளர்ச்சி நிதி கூட, குறித்த காலத்தில் ஒதுக்கப்படாது. ஜெயலலிதா மறைவால், தற்போது, ஆளுங்கட்சியினருடன்,
தி.மு.க.,வினர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களாக உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி, அரசு ஒப்பந்த பணி எடுப்பது, வேண்டிய அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் பெறுவது போன்ற காரியங்களை, சத்தம் இல்லாமல் முடித்து கொள்கின்றனர். அதேபோல, தொகுதிகளில் நடக்கும், அரசு ஒப்பந்த பணிகளில், உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில், தி.மு.க.,வினருக்கும், உரிய கமிஷன் போய் விடுகிறது.

முடிவு:இதனால், தி.மு.க., ஆட்சி நடப்பது போன்ற உணர்வில் தான், அக்கட்சியினர் வலம் வருகின்றனர்.இந்த தகவல், கட்சி மேலிடத்திற்கும் தெரியும் என்பதால், லோக்சபா தேர்தல் செலவை, அவர்கள் தலையில் சுமத்த, முடிவு செய்துள்ளது. அதன் துவக்கமாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடமும், தலா, 2 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக வசூலிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஆரம்பிச்சுட்டார்யா அப்பன் வழியை .

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  திமுக ஒரு ரவுடி கட்சி அது மட்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

 • மெய்கண்டான் - Chennai,இந்தியா

  ஊழல் அற்ற ஆட்சியின் லட்சணம் தெரிகிறதா மக்களே...?

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ராஜ்ய சபை உறுப்பினராக இருந்துவரும் கனிமொழியார் எவ்வளவு கொடுக்கவேணும்? உத்தேசமாக இருநூறு கோடிகள்?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   திரும்பவும் 200 கோடியா...

 • nanthuji -

  சுடாலின், கலைஞரின் மகன் என பல மேடைகளில், விடாமல் முழங்கியதன் அர்த்தம் , இந்த ஆட்டு மந்தைக் கூட்டத்திற்கு இப்போதாவது உறைத்தால் சரி..

 • krish - chennai,இந்தியா

  இதுவும் ஒரு நல்ல உள்கட்சி demonetisation drive என்கிற போது மகிழ்ச்சி அளிக்கின்றது. திமுகவின் கருப்பு பணம் (நான்கு திசைகளில் இருந்தும்) வெளிவர இது ஒரு சாதுர்யமான நடவடிக்கை. வாழ்த்துக்கள்.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  //தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி, அரசு ஒப்பந்த பணி எடுப்பது, வேண்டிய அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் பெறுவது போன்ற காரியங்களை, சத்தம் இல்லாமல் முடித்து கொள்கின்றனர். அதேபோல, தொகுதிகளில் நடக்கும், அரசு ஒப்பந்த பணிகளில், உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில், தி.மு.க.,வினருக்கும், உரிய கமிஷன் போய் விடுகிறது.//திருட்டு திமுக வுக்கு இது புதிதல்ல இவர்களுக்கு உழைக்க தெரியாது. ஏழை மக்களின் அழு குரலை ரசிப்பவர்கள்.திருட்டு திமுக கார்ப்பரேட்களின் கட்சி. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் தலைவர்கள் திருட்டு கழங்களிடம் இல்லை. அதனால் எங்களின் ஓட்டுக்களும் இவர்களுக்கு இல்லை...இல்லை.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  DMK நாசமா போக வேண்டும்.

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   “ங்கொய்யால... கொய்யா...? கொடுத்த காசுக்கு மேலே கூவுறாண்டா.... கொய்யால...? கொய்யால... காசாடா முக்கியம்.... கூவுறதுதான் முக்கியம்...”ங்கற வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருகிறது சார்...?

  • HSR - Chennai,இந்தியா

   நீர் எவ்வளவு வாங்கினீர்.

 • RAJ - chennai,இந்தியா

  இனி கடை எல்லாம் கட்டாய வசூல் தான்.

 • Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்

  இப்படி பணத்தாசை பிடித்த அரசியல் வியாதிகளை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்தால் எவன் நேர்மையாக சேவை செய்யப்போகிறார்கள் . அரசியல் நம் நாட்டில் வியாபாரமாக்கப்பட்டு பலவருடங்களாகி விட்டது அதை வழிமொழிந்த பொதுமக்களும் அனுசரித்துப் போகத்தான் வேண்டும் . நீதி , நேர்மை , மக்கள் சேவை என்று பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் அதையெல்லாம் அரசியல் வாதிகளிடம் எதிர்பார்க்க கூடாது .

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பணம் இருப்பவனை தோற்கடியுங்கள் உண்மையான மக்கள் சேவகர்களை தேர்ந்து எடுங்கள் . மக்கள் சக்தி இதை உணர்ந்தால் நல்லது.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  எம் எல் ஏக்களிடம் பணம் வாங்கினால் அவர்கள் யார் தலையில் கை வைப்பார்கள் ???

 • Indhuindian - Chennai,இந்தியா

  ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி இப்போ நம்ம கூட்டாளிகளையே கடிக்க ஆரம்பிச்சிட்டாங்க

 • ஸாயிப்ரியா -

  இதுபோல் பலமடங்கு திரும்பும் என்று அசாத்திய நம்பிக்கை கனவு முதல்வருக்கு.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பத்து தலைமுறைக்கு தேர்தல் செல்வுகளை எதிர்க்கொள்ளும் அளவிற்கு செலவு செய்யும் அளவிற்கு இந்த குடும்பத்தில் பணம் இருந்தும் ...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   இவங்களும் செலவு பண்ணுவாங்க. "உமி கொண்டு வருவாங்க".

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  இந்த இரண்டு கோடி கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த பணம் எப்படி வசூல் ஆகும்? பொதுமக்களின் பணத்தை லூட்டி அடித்தால்தான் பணம் திரும்ப வரும். யார் வந்தாலும் கொள்ளை அடிப்பது என்பது உறுதி.

 • Siva - Aruvankadu,இந்தியா

  மீண்டும் அநியாயம் ஆரம்பம்....கோடி கொடுப்பவன் என்ன தொழில் செய்கிறான்? இல்லை அரசியல் தொழில்..... கலியுகம்... காவு வாங்கும் நிம்மதி இழப்பீர் ஆரோக்கியம் கெடும்... நல்ல வாய்ப்பு அதை பயன்படுத்த தெரியாத.....

 • C.Elumalai - Chennai,இந்தியா

  எம்எல்ஏக்கள் இப்போ 2 கோடி கொடுத்து, பிறகு 200 கோடி ஆட்டைய போடுவார்கள்.

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  எங்கள் ஊரில் உள்ள திமுக ஆட்கள் போன வருடம் வசூல் செய்தார்களே.. அப்போ அந்த வசூல் தலைமைக்கு தெரியாதா? இப்படி தனியாக வசூல் செய்தால் நாட்டுக்கோட்டை சென்று ஆட்சியை பிடிக்க மட்டுமே முடியும்

 • s t rajan - chennai,இந்தியா

  தில்லு முல்லு கலகம் (திமுக) செய்து சம்பாதித்த தெல்லாம் அந்தக குடும்பக் கணக்கில் ஏறிடுமோ ? அப்போ வரவு 100 ன்னா செலவு 0. சிறந்தக் குடும்பக் கொள்ளை கட்சிதான்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஸ்டாலின்: "500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென்று அறிவித்ததின் பொருட்டு நாங்கள் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்ததை (பல லட்சம் கோடி ரூபாய்) எல்லாம் வெளிக்கொணர முடியாமல் மிகவும் நஷ்டம் அடைந்து விட்டோம். எனவே எங்கள் குடும்ப நிதிக் குறைவை சரிக்கட்ட ஆளுக்கு இரண்டு கோடி ரூபாய் தேர்தல் நிதி அளிக்க வேண்டும்".

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இரண்டு கோடி எதற்கு? இருபது கோடி கேளு. எப்படியும் தோல்விதான். உமது கஜானாவாவது நிரம்பும்.

 • karthikeyan - singapore,சிங்கப்பூர்

  சுடலை இப்படி வாங்கினா அப்புறம் உங்க கட்சி சட்ட மன்ற , நாடாளுமன்ற உறுப்பினர் கொள்ளை அடிக்காமல் காமராஜர் , கக்கன் போன்றா இருப்பார்கள் ? ஏன் இவ்வளவு நாளா கொள்ளை அடித்த பணத்தை வெளியில் விடவேண்டியது தானே ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement