ஏழை, எளிய மக்களும், வங்கிகளில் கணக்கு துவக்கும் வகையில், மத்திய அரசு, 2014ல், ஜன்தன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
34 கோடி:
'ஆதார்' மட்டும் இருந்தால் போதும், வங்கி கணக்கு துவங்கி விடலாம், வேறு எந்த ஆவணமும் தேவையில்லை. இந்த திட்டத்தின் கீழ், இப்போது, 34 கோடி பேர், வங்கி கணக்கு வைத்துள்ளனர். இதற்கிடையில், 2018 ஆகஸ்ட், 28க்கு பின், கணக்கு துவக்கியவர்களுக்கு, விபத்து காப்பீடு தொகையை, 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது. இதனால், ஜன்தன் திட்டத்தின் கீழ், பலர் புதிதாக கணக்கு துவக்கினர். இதையடுத்து, ஜன்தன் கணக்குகளில் டிபாசிட் செய்யப்படும் தொகையும் அதிகரித்தது.
53 சதவீதம்:
இந்த ஆண்டு, ஜன., 30வரை, ஜன்தன் கணக்குகளில், 89 ஆயிரத்து, 257 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச், 31க்குள், இந்த தொகை, 90 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. 'ஜன்தன் கணக்கு வைத்திருப்போரில், 53 சதவீதம் பேர் பெண்கள்; 59 சதவீத கணக்குகள், கிராமப்புறத்தை சேர்ந்தவை' என, நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
முப்பது கோடி ஏழை மக்கள் 90 ஆயிரம் கோடி சேமிப்பு என்றால் சராசரியாக 3000 ரூபாய் சேமிப்பு நல்ல முன்னேற்றம் மத்திய அரசின் விவசாயிக்கான 6000 மாநில அரசின் நலிந்தோர்க்கான 2000 கிடைத்தால் ஆண்டுக்கு 11000 என சேமிப்பு உயரும் பாராட்டுக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர் விவசாய கூலி தொழிலாளி பெரும் பென்ஷன் 3000 12 சேர்ந்தால் 47000 ஆண்டு சேமிப்பு . அருமை . இரண்டு வருடத்தில் சிலர் லட்சாதிபதியாக வாழ்த்துக்கள் .