Advertisement

புனித நீராடுவதை புகைப்படம் எடுக்க தடை

பிரயாக்ராஜ்: கும்பமேளாவில், மக்கள் புனித நீராடும் பகுதிகளில் புகைப்படம் எடுக்க, அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சேரும், திரிவேணி சங்கமத்தில், கும்பமேளா நடந்து வருகிறது.

இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அசீம் குமார் ராய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கும்பமேளாவில் புனித நீராடுவது,
மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஆனால் பலர், நீராடுவதை புகைப்படம் எடுக்கின்றனர். பத்திரிகைகள் மற்றும் 'டிவி சேனல்கள்' வி.ஐ.பி.,க்கள் நீராடு வதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வெளியிடுகின்றன.

திரிவேணி சங்கமத்தில், 2013ல் கும்பமேளா நடந்தது. அப்போது, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'கலாசாரமும், நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும். 'அதனால், குளிப்பதை புகைப்படம் எடுப்பது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. நீராடும் பகுதிகளில் புகைப் படம் எடுக்கப்படுவதை, கும்பமேளா நிர்வாக கமிட்டி தடுக்க வேண்டும்' என, கூறியிருந்தது. ஆனால், இந்த உத்தரவை, கும்பமேளா நிர்வாக கமிட்டி செயல்படுத்தவில்லை. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கும்பமேளாவில், மக்கள் நீராடும் பகுதிகளைச் சுற்றி, 100 மீட்டர் துாரம் வரை, பத்திரிகைகள், 'டிவி சேனல்கள்' உட்பட யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க, கும்பமேளா நிர்வாக கமிட்டி அனுமதிக்க கூடாது. இதை மீறுவோர், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இவ்வாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கும்பமேளாவை ஒட்டி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சியில், 30 கிலோ எடை உடைய, தென்னங்கன்று, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. உலகிலேயே, இதுதான் மிகப்பெரிய தென்னங்கன்று விதையாக கருதப்படுகிறது என, உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த மரம், 1,000 ஆண்டுகளுக்கு மேல் வாழும் என்றும் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    செல்பி எடுக்கலாமுங்களா.. ஜட்ஜ் ஐயா ...

  • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    " கலாசாரமும், நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும் " - அலகாபாத் நீதி மன்றம் .......எந்த அடிப்படையில் கேரளா ஐயப்பன் கோவிலை விமர்சனம் செய்தது நீதிமன்றம் ? ....

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நல்ல மனம் உள்ளவர்கள் மிகவும் சொற்பம்

  • suresh - omaha,யூ.எஸ்.ஏ

    ஜட்ஜ் அய்யா என்ன சொல்றாருன்னு புரியலையா? குளிக்கிறதை குளோசப்ல காட்டினாதான் குத்தம். லாங் ஷாட் ஓகே.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    வி.ஐ.பி களுக்கு (பப்ளிக் சர்வெண்ட்) ஒரு சட்டம். பொது மக்களுக்கு (அதாவது சம்பளம் கொடுக்கும் முதலாளிகளுக்கு) ஒரு சட்டமா?

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    மக்கள் புனித நீராடும் பகுதிகளில் புகைப்படம் எடுக்க தடை. ஆனால் பாத் ரூம்களில் நீராடுவதை (குளிப்பதை) புகைப்படம் எடுக்க தடை இல்லை.

  • blocked user - blocked,மயோட்

    இது போன்று நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதை கண்டிப்பதை விட்டுவிட்டு புகைப்படம் எடுக்கக்கூடாது போன்ற கேவலமான ஆணைகளை பிறப்பித்து நீதிமன்றம் தன்னை கேவலப்படுத்திக் கொள்கிறது...

    • suresh - omaha,யூ.எஸ்.ஏ

      வேறு என்ன செய்ய சொல்றீக? வழக்குன்னு வந்துட்டா விசாரிச்சுதானே ஆகணும்? இந்த மாதிரி கேஸ்களை நீதி மன்றத்துக்கு கொண்டு வரும் ஆட்களை பப்ளிக்ல வச்சி குளிப்பாட்டணும்.

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் பேர பிரயாக்ராஜ் ன்னு மாத்தனமாதிரி நாமும் கோயமுத்தூர் பேர பாக்யராஜ் ன்னு மாத்துனா நல்லா இருக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement