Advertisement

இடைத்தேர்தலுக்காக போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை

ஓசூர்: ''லோக்சபா தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கா விட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் அவர் பேசியதாவது: பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல்
நடத்தியிருக்க வேண்டும். 15 மாதங்களாகியும் நடத்தவில்லை. 'முதல்வரை மாற்ற வேண்டும்' என கவர்னரிடம் மனு கொடுத்ததால் எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது. முதல்வருக்கு எதிராக ஓட்டளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரின் பதவி மட்டும் பறிக்கப்படவில்லை.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் 11 பேரின் பதவி பறிக்கப்பட்டதாகத் தான் தீர்ப்பு வரும். அப்போது இந்த ஆட்சி கவிழும். பா.ஜ.விடம் '21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வேண்டாம். ஏனெனில் நாங்கள் டிபாசிட் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளோம். இருக்கும் வரை அனுபவித்து விடுகிறோம். இதற்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி வைத்து கொள்கிறோம்' என அ.தி.மு.க.வினர் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கா விட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இவ்வாறு பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18 + 16)

 • R S GOPHALA - Chennai,இந்தியா

  இடை தேர்தலா பப்பு ? உனக்கு இனிமேல் இறுதி தேர்தல்தான்... ஒரேயடியாக ஆப்பு அடிக்க போகிறார்கள். ஜாக்கிரதை.

 • மெய்கண்டான் - Chennai,இந்தியா

  சுடலை, இடைத்தேர்தல் வேண்டாம் என்று நீங்க மனு கொடுததில்லையா?

 • Kalyani S - Ranipet,இந்தியா

  தேர்தலைக்கண்டு திமுக பயப்படுகிறது என்று கூறிவருபவர்களுக்கு ஸ்டாலினின் இந்த கோரிக்கை வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 • sadayan - chennai,இந்தியா

  நாளுக்கு நாள் இவரின் வயிற்று எரிச்சல் thaanga முடியல இவரின் போராட்டம் தொகுதிகளில் குறை தீர்க்க MLA இல்லை என்றா நலத்திட்டங்கள் நடைபெற வில்லை என்றா இல்லை இல்லை இல்லை எட்டு ஆண்டுகள் இவர்களின் வியாபாரம் சரியான லாபம் தரவில்லை, புதிய டிவி சேனல், பொறியியல், மருத்துவ கல்லூரி, கருங்கல், மணல் குவாரிகள் தொடங்க முடியல ஆளில்லா சொத்துக்கள் ஆட்டைய போட முடியல இதற்காகத்தான் போராட்டம்

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  உள்ளாட்சி தேர்தலை நடத்த சொல்லி கோர்ட் பலமுறை தலையில் குட்டி விட்டது .. இப்போது அதனுடன் இடைத்தேர்தலும் சேர்ந்துகொண்டது .. அப்படியென்ன பயம் தேர்தலை சந்திக்க?.. சுடாலின் ஜெயிக்கிறாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும் ... தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஜனநாயக விரோதம் ..

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  ஏற்கெனவே நோட்டா கூட போட்டி போடறப்ப பாஜக, பாஜக என கட்டைல போறவனுங்க எட்டு கட்டைல ஒப்பாரி வைப்பானுங்க.. இப்ப திருப்பூர்ல, கூட்டணி இன்னும் உருவாகாமலேயே நல்ல கூட்டம் கூட்டியாச்சு.. (இந்நேரம் கூட்டணி வந்திருந்தால் கூட்டணியால் கூட்டம் என சொல்லியிருப்பாங்க) இனி ஒப்பாரி, ஓலம் பத்து கட்டைல இன்னும் நாராசமா இருக்கும்...

 • ravisankar K - chennai,இந்தியா

  இவர் எதாவது போராட்டம் நடத்தினால் அப்படியே உள்ளே தள்ளுங்கள் ....குறைந்தபட்சம் வழக்காவது போடணும் ....சென்ற முறை கவர்னர் மளிகை அருகில் போராட்டம் நடத்தி நிறைய பேர் வேலைக்கு செல்ல முடியவில்லை ....வெறும் சுயநலவாதி ..........

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எப்பிடியாவது இந்த ஆட்சியை கலைக்கவேண்டும் என்ற உங்களது ஆவல் தெரிகிறது

 • விவசாயி மகன் - Tiruppur,இந்தியா

  உள்ளாட்சி தேர்தல் முதல் திருவாரூர் இடை தேர்தல்வரை நடத்த தடை கோரி நீதிமன்றம் சென்ற நீங்கள், இப்போ நடத்த வேண்டும் என கூறுகிறீர்கள்........ கமல்ஹாசன் கூட்டணிக்கு வரும் முன்னே அவரை போலவே மக்களை குழப்பினா எப்படி????.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பொருத்தம்தான் .இடைத்தேர்தலுக்காகப் போராட முழுத்தகுதியும் பெற்றது இடுப்புகிள்ளிக் கட்சியே

 • Nagercoil Suresh - India,இந்தியா

  ஸ்டாலின் லேட்டாக புரிந்துள்ளார், அதற்கு தானே நாங்கள் முதல் தவணையிலே நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு கேட்டுள்ளோம்..11 எம் எல் ஏக்களின் தீர்ப்புக்கும் கூட்டணி பேச்சுக்கும் தொடர்வு இருக்க வாய்ப்பில்லை...

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  அப்படி இடைத் தேர்தல் வந்து அதிமுக தோற்று உங்க ஆட்சி வந்துட்டா, இந்த முறை உதயநிதி துணை முதல்வரா ஆவாரா ஸ்டாலின் சார்?

 • blocked user - blocked,மயோட்

  ஒரு பக்கம் மனுக்கொடுத்து அடுத்த பக்கம் போராட்டம்... வெளங்கும்...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவருக்கு ஏதாவது காரணம் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். இந்த ஆர்பாட்டத்தில் தான் இவர் குடும்ப முன்னேற்ற கட்சியின் கலைகள்: சைக்கிள் செயின், சோடா பாட்டில் வீச்சு, சாலை மறியல், பேருந்து தீவைப்பு, பொது சொத்திற்கு கேடு, பொதுமக்களுக்கு இடைஞ்சல், போன்றவற்றை மேடை ஏற்ற முடியும். தமிழ் நாடு அமைதியாக இருந்தால் சிலருக்கு பொறுக்காது. தமிழருக்கு நல்லது நடந்தால் சிலருக்கு வயிறு எரியும்.

  • Muruga Vel - Chennai,இந்தியா

   சைக்கிள் செயின், சோடா பாட்டில் வீச்சு, சாலை மறியல், பேருந்து தீவைப்பு, பொது சொத்திற்கு கேடு, பொதுமக்களுக்கு இடைஞ்சல் .. இதெல்லாம் அந்த காலத்தில் .. இப்போ பிரியாணி கடை பாசம் ..

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மோடி அரசில், தேர்தலை நடத்த கோரி மக்களை திரட்டி எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தும் அளவிற்கு இந்தியாவில் ஜனநாயகம் ஓங்கி வளர்ந்துள்ளது என்று பிஜேபி காரர்கள் பெருமை கொள்ள வேண்டுமா? போனவாரம் பிரதமர் காஷ்மீருக்கு சென்று, யாரை பார்த்து கையாட்டினார்? என்று உலகமே நம்மை பார்த்து சிரிக்கிறது. ப்ளீஸ், சாதி மத பிரிவினையை மறந்து ஒருநிமிடம், நாம் மனிதர்கள் என்று நினைத்து பாருங்கள். சுதந்திரம் வாங்கியதில் இருந்து முதல் முறையாக, வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் இந்திய ஜனநாயகமும் தேர்தல் கமிஷனும் உள்ளது. உண்மையான பிஜேபி காரர்கள் இதை நினைத்து நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

  • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

   //.. வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் இந்திய ஜனநாயகமும் தேர்தல் கமிஷனும் உள்ளது..// ரிசர்வ் வங்கி, சுப்ரீம் கோர்ட், சி.பி.ஐ, மத்திய புள்ளியியல் துறை இன்னும் இப்படி நிறைய அந்த லிஸ்ட்ல இருக்கு அன்பு சார்.

வழக்கு தொடர்வோம்: ஸ்டாலின் எச்சரிக்கை (16)

 • partha - chennai,இந்தியா

  அதற்குள் முதல்வன் தோரணை

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  சுடலைக்கு திறமையிருந்திருந்தால் ஒரு வருடம் முன்னரே இந்த ஆட்சியை கவிழ்த்திருக்கலாம். இப்போது புரிகிறதா கலைஞர் ஏன் முதலமைச்சர் பதவியை விட்டு தரவில்லை என்று

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  சோனியாவின் மகளே வருக சொகுசான வாழ்வு தருக என்று ஸ்டாலின் புது கோஷம் இடலாம்.

 • தேவதாஸ், பூனே -

  வழக்கு தொடர்வோம்....தொடரவேண்டியதுதானே....ஏன் சொல்லிக்கிட்டே இருக்கிருங்கே.....

 • kulandhai Kannan -

  இவர் ஏன் திருவாருர் இடைதேர்தலைத் தள்ளி வைக்கக் கோரினார்?? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்.....

 • Tamilselvan - Chennai,இந்தியா

  இவர் பல பதவி வகித்து உள்ளார். எதிலாவது உருப்படியாக செய்து உள்ளாரா ??

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  The judiciary is requested to start a special Court for inquiry into all the Stalin's cases against mainly AIADMK.If Edappadi stands one case and if Edappadi sits one case is being filed by Stalin. There are many MLAs and MPs in AIADMK and daily they are standing and sitting and many cases will follow from Stalin and Special Court is necessary to give verdicts immediately before the elections and to see that AIADMK is thrown out of power and Stalin to sit in C.M's chair. What an excellent performance by Stalin as an opposition Party Leader. Tamilnadu people must appreciate Stalin's style of working in opposition benches. Stalin is contributing to more work in Courts now and after Stalin comes to power he will contribute most for Tamilnadu people because Stalin has noted all problems of people during NAMAKKUNAME and Village meetings.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  வழக்குத் தொடர்வோம்.... அதைத் தவிர வேற என்ன தெரியும் உமக்கு....??? தேர்தல் நடத்தவும் வழக்கு அதைத் தடுத்து நிறுத்தவும் வழக்கு....??? தோல்வி பயம் தான் காரணம்....???

  • Sivaprakasam Manickam - Chennai,இந்தியா

   வழக்கு தொடர்ந்தால் பதினெட்டு ஆண்டுகளுக்கு வாய்தாவாங்குவோம் அந்த இடைப்பட்ட நாட்களிலும் பதவிக்கு வருவோம் நீதிமன்றங்களில் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால்.... குற்றவாளி இறந்துவிட்டால் குற்றம் செய்தது இல்லாமல் போய்விடும் ஆனால் சமூகத்தில் மட்டும் ஒரு சாதாரண மனிதனை அவனது முன்னோர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டியே சமூகத்தை விட்டே விளக்கி வைப்போம், சாகடிப்போம்.

 • jambukalyan - Chennai,இந்தியா

  ஏனப்பா, நீ ரொம்ப தைரியசாலி தானே, எதற்கு காங்கிரஸுடன் கூட்டு? அவனவன் முதுகில் உள்ள அழுக்கு அவனவனுக்கு தெரியாது

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மத்திய அரசு 2g கோப்புகளை தூசிதட்டினால் இந்த பேச்சுக்கள் இருக்காது

 • blocked user - blocked,மயோட்

  மிரட்டலுக்கு பயந்து திமுகவுடனா கூட்டு வைப்பார்கள்...

 • oce - chennai,இந்தியா

  ரொம்ப முக்கியம். திமுக கூட்டணி போல் அவர்களும் வைத்துள்ளனர் அதை ஏன் கேலி செய்கிறீர்கள்.

  • Vittal Anand - Chennai,இந்தியா

   செய் அல்லது செத்து மடி இது காந்தியடிகள் சொல்

  • Vittal Anand - Chennai,இந்தியா

   தலை முடி நிறத்தை மாற்று. உண்மையான முகத்தை மேக்கப் செய்யாமல் இரு. மக்கள் உன்னை நம்புவார்கள். தோற்றமே பொய் உனது வார்த்தைகளும் பொய்

 • oce - chennai,இந்தியா

  ரொம்ப முக்கியம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement