Advertisement

விரும்பிய சேனல்களுக்கு கட்டணம்; 9 கோடி வாடிக்கையாளர் மாற்றம்

புதுடில்லி: ''விரும்பிய, 'சேனல்' களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் முறைக்கு, ஒன்பது கோடி வாடிக்கையாளர்கள் மாறியுள்ளனர்,'' என, 'டிராய்' எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் தலைவர், ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.

விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, பிப்., 1ல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு சேனலும், தங்கள் கட்டணம் என்ன என்பதை விளம்பரப்படுத்தி வருகின்றன. 'இந்த புதிய முறை, நடைமுறைக்கு வராது' என, பலரும், முதலில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இது நடைமுறைக்கு வந்த பின், அதற்கு மாறி வருகின்றனர்.

இது குறித்து, டிராய் தலைவர், ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: நாடு முழுவதும், மொத்தம், 17 கோடி, 'டிவி' இணைப்புகள் உள்ளன. இதில் 10 கோடி பேர், 'கேபிள் டிவி' மூலமாகவும், மீதமுள்ள ஏழு கோடி பேர், டி.டி.எச்., எனப்படும் நேரடியாக வீடுகளுக்கு இணைப்பு தரும் முறையையும் பயன்படுத்தி வருகின்றனர். விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் முறைக்கு, இதுவரை, ஒன்பது கோடி பேர் மாறியுள்ளனர்; மீதமுள்ளவர்கள் மிக விரைவில் மாறுவர் என, எதிர்பார்க்கிறோம்.

டி.டி.எச்., முறையில், முன்னதாகவே பணத்தை செலுத்தி விடுவதால், ஏற்கனவே செலுத்திய தொகைக்கான காலம் முடிந்த பின், இவர்கள் மாறுவர் என, எதிர்பார்க்கிறோம். சில வீடுகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட, 'டிவி' இணைப்புகள் இருக்கும்.

இது போன்றவர்களுக்கு, கட்டண சலுகை அளிப்பது குறித்து, கேபிள் மற்றும் டி.டி.எச்., சேவையை அளிக்கும் நிறுவனங்களே முடிவு செய்யலாம். எவ்வளவு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது என்பதை, தங்கள் இணையதளத்தில் அவர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

  • kannan - Madurai,இந்தியா

    காசு குடுத்து நாம சானல்களை பார்த்தா நாம அவனுக்கு அடிமை. காசு வாங்கும் சானல்களை புறக்கணித்தால் அவன் நமக்கு அடிமை. நீங்களே முடிவுபண்ணுங்க மக்களே. ரொம்ப வேண்டாம் ஒரு ரெண்டு மாசம் கட்டண சானல்களை புறக்கணியுங்கள். அப்புறம் எல்லா சானல்களும் இலவசமாக கிடைக்கும்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    காசு கொடுத்து பார்ப்பதை தவிர்த்தால் கட்டண சானல்கள் விலை குறையும்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    கட்டண சானல்கள் எவை எவை என மக்களுக்கு தெரிவிக்கலாம் செய்தித்தாள் மூலம். ,

  • Manian - Chennai,இந்தியா

    சீரியல்களை பார்க்கும் பைத்தியங்கள் கனவு உலகில் சஞ்சரிக்கும் வரை இது நடக்கும். எல்லோரும் ஒரு மாசம் டிவியை நிறுத்தினால் உலகம் அஸ்தமிக்காது. கொய்யுக்கு பொய் நம்பி பேசுதல், பார்க்கில் அமர்ந்து வம்பு பேசுதல், நடை பயிற்சி வம்புகள் என்று எத்துனையோ பொழுது போக்கி இருக்கும் பொது டிவி எதற்கு? ஒரே தொந்தரவு என்னான்னா, கூடவே வீட்டுக்கு வந்து காபி கேட்பவர்கள் எண்ணிக்கை கூடினால் கடடுப்படியாகுமா ? பாட்டி பொன்னு தாயி.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    I TOTALLY avoid SUN TV group channels and KATTUMARAM channels even though it is free.

Advertisement