Advertisement

ஹனோய் நகரில் டிரம்ப், கிம் சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் சந்திப்பு வியட்நாமின் தலைநகரமான ஹனோய் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக உச்சிமாநாடு நடந்த போது சந்தித்து பேசினர். இந்த பேச்சு வார்த்தையின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர். இதையொட்டி ஒரு உடன்பாடும் செய்து கொண்டனர். ஆனாலும் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும், வடகொரிய தலைவர் கிம் ஜங் உன், டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுத்து, முயற்சி மேற்கொண்டார். அதை டிரம்ப் ஏற்றார்.இந்நிலையில் பிப்.5ல் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை ஆற்றிய டிரம்ப், வியட்நாமில் 27, 28-ந்தேதிகளில் கிம் ஜங் உன்னை சந்தித்து பேசுகிறேன் என அறிவித்தார்.இந் நிலையில், டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 2வது உச்சி மாநாடு நடக்கும் வியாட்நாமின் தலைநகர் ஹனோய் நகரில் வடகொரிய தலைவர் கிம்ஜங் உன்னை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன். இது அமைதிக்கான நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement