Advertisement

நியூசிலாந்தில் காட்டுத் தீ

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல்சன் நகரில் 6-வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.தீயைக் கட்டுப்படுத்த 23 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காற்றின் வேகம் அதிகமிருப்பதால் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் 6 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். சுமார் மூன்றாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயின் தாக்கம் அதிகமிருப்பதால் மேலும் 75 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர். 1955-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக நியூசிலாந்தில் மிகப்பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement