Advertisement

டவுட் தனபாலு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: தமிழகத்தில், என்றும் ஆளக்கூடிய கட்சி, அ.தி.மு.க., என்பதை, அனைவரும் உணர்ந்துள்ளனர். எம்.ஜி.ஆர்., - ஜெ., அலையின் முன், மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும்.

டவுட் தனபாலு: தி.மு.க., உள்ளிட்ட மாநில எதிர்க்கட்சிகளுக்குச் சொல்லும் தகவலாத் தெரியலையே... உங்களோடு நெருக்கம் பாவிக்கும், பா.ஜ.,வுக்கு ஏதோ பெருசா, 'உள்குத்து' வைக்குற மாதிரி, 'டவுட்' வருதே...!

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என, 2014ல், மோடி வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இதுவரை இரண்டு மடங்கு வீழ்ச்சிதான் அடைந்துள்ளது.

டவுட் தனபாலு: ஒரு தேர்தலில் சொன்னதை நிறைவேற்றலை என்பதற்கே இவ்வளவு கோபப்படுறீங்களே... ஒவ்வொரு தேர்தலின்போதும், 'வறுமையை ஒழிப்போம்; அனைவருக்கும் வளமான வாழ்வளிப்போம்'னு, சொல்லி சொல்லியே ஆட்சிக்கு வந்த, காங்கிரசை பத்தி, ஏன் வாய் திறக்க மறுக்குறீங்க என்பதுதான், மக்களின், 'டவுட்!'

***

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: பிரதமர் மோடியின் நேர்மை மற்றும் நோக்கத்தின் மீது, யாரும் சந்தேகப்பட்டு கேள்வி கேட்க முடியாது. ரபேல் விவகாரத்தில், ராகுல் கூறும் பொய்களை, மக்கள் நம்ப மாட்டார்கள்.

டவுட் தனபாலு: சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இங்கு யாருங்க இருக்கா... அதை விடுங்க... 'ரபேல் விவகாரத்தில், ராகுல் கேட்கும் கேள்விகளுக்கு, பிரதமர் மோடி, இதுவரை திருப்திகரமாக பதில் அளிக்கவில்லை'ன்னு, நீங்க, பெரிதும் விரும்பும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சொல்றாரே... கூட்டணிக்காக பலமுறை அவரிடம் பேச்சு நடத்தும் நீங்க, ரபேல் விவகாரத்தில், நம்பிக்கை ஏற்படும் வகையில், இதை ஏன் விளக்கலை என்பது தான், என்னோட, 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement