Advertisement

களிமண், 'தவா'விற்கு வரவேற்பு

புழல்: வட மாநில தொழிலாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ள, சப்பாத்தி தயாரிக்கும் களிமண், 'தவா'விற்கு, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னையில், வட மாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் வண்ண குதிரை பொம்மை, ஊஞ்சல், வண்ணப் போர்வைகள், பூச்செடி வளர்க்கும் தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், விற்பனைக்கு வருவது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் தற்போது, சென்னை புழல், மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில், களிமண்ணால் உருவாக்கப்பட்ட, சப்பாத்தி செய்யும் தவா விற்பனைக்கு வந்துள்ளது.

400 கிராம் எடை கொண்ட இந்த தவா, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் சப்பாத்தி தயாரிக்கவும், ஒருவர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு, மீன், கறி வறுவல் ஆகியவற்றை சமைக்க முடியும்.

சமையலுக்கான மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்த நிலையில், 'எவர் சில்வர்' பாத்திரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், மண்பாண்டங்களின் பயன்பாட்டை நினைவூட்டும் வகையில், தப்போது, களிமண்ணால் செய்யப்பட்ட சப்பாத்தி தவாவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மண்பாண்டங்கள் உடலுக்கு ஊறுசெய்யாது பீங்கான் பொருட்களை பயன்படுத்தினால் நாகரீகம் மண்பாண்டங்களை பயன்படுத்தினால் இழிவு என்னும் மாயையில் இருந்து மக்கள் விடுபட்டால் இந்த தொழில் சிறக்கும்

Advertisement