Advertisement

51 வேலைக்கு 5,000 பேர்; தடியடி நடத்திய போலீசார்

வேலுார்: ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பம் வாங்க வந்த இளைஞர்களிடையே 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வேலுார் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 51 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'இதற்கான விண்ணப்பம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்றும் இன்றும் இலவசமாக வழங்கப்படும்' என எஸ்.பி. பிரவேஷ்குமார் அறிவித்தார்.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5000த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் குவிந்தனர். காலை 10:00 மணிக்கு கலால் ஏ.டி.எஸ்.பி. ஆசைத்தம்பி விண்ணப்பங்களை வினியோகித்தார். ஒரே நேரத்தில் விண்ணப்பங்களை வாங்க பலரும் முண்டியத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் அத்துமீறி விண்ணப்பங்களை பெற முயற்சித்ததால் அந்த இடமே போர்க்களமானது. இதையடுத்து தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • S.prakash - Palakkarai,இந்தியா

  தடியடியில் இருந்தே பணி துவங்குகிறது.

 • suresh kumar - Salmiyah,குவைத்

  தனியார் தொழிற்கூடங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர்கள் பேனர்கள் வைத்து காத்திருக்கும் இடத்தில் யாரும் வருவதில்லை - ஆனால் அரச பணி அதுவும் காவல் பணி என்றால் இப்படி அடித்துக்கொள்கிறார்கள்?

 • ஆப்பு -

  பேசாம மோடி அய்யாவுக்கு ஓட்டுப் போடுங்க. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை குடுத்திட்டு வர்ராரு புண்ணியவான். அப்பிடி வேலை குடுக்க முடியலேன்னா, 15 லட்சமாவது போட்டுடுவாரு.

  • sura Gopalan -

   பணம் பணம்னு ஏன்டா இப்படி பாத்திரம் ஏந்துற

  • சுந்தரம் - Kuwait

   நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் - விக்கு மண்டையன்.

  • Saleem - Dubai

   ஆப்பு... அவர்கள் ஜெயிக்க மாட்டோம் என்று அல்லவா நினைத்து சொல்லிவிட்டார்கள்.. இன்னுமா இந்த ஊர் பிஜேபி வாக்குறுதியை நம்புது?

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  கன்றாவியாயிருக்கே வேலை இல்லேன்னு தவிக்கும் நபர்களை இப்படியா அடிப்பானுக தங்கள் ஒண்ணாந்தேதி சம்பளம் அண்ட் மற்ற திங்களில் லஞ்சமும் வாங்குற திமிருதான்

  • Jaya Ram - madurai,இந்தியா

   முதலில் ஒன்று தெரியுமா ஊர்க்காவல் படை என்பது கௌரவ பணிதான்மாதம் நான்கு டூட்டி கொடுப்பார்கள் இரண்டு டிராபிக் இரண்டு பாதுகாப்பு அவ்வளவுதான் இதற்க்கு புரியாமல் அடித்துக்கொள்பவர்காலை என்னவென்பது அதில் பணிபுரியும் காவலர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது உயிரிழந்தான் கூட பொதுமக்களுக்கு என்னவிதியோ அதுதான்

 • arudra1951 - Madurai,இந்தியா

  வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையை மறக்க அப்படியே நம்ம அரசு டாஸ்மாக் பக்கம் வாங்க.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பாவம் அந்த வேலையற்ற இளைஞர்கள் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆன்லைனில் தேவைப்பட்டவர்களை தரவிறக்கம் செய்ய சொல்லியிருக்கலாமே ரொம்ப விவரமான காவல்துறை வாழ்க

 • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

  அறிவு மிகுந்த காவல் துறை online விண்ணப்ப முறையினை செய்திருக்கலாமே.அடிக்கடி தங்களை தமிழக காவல் துறையினர் அதி புத்திசாலிகளாக நிரூபித்து வருகிறார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement