Advertisement

ராகுல் பிரச்னை தீர்ந்தது!

தேர்தல் சமயத்தில், கட்சி தலைவர்கள், விமானத்தில் சென்று, ஊர் ஊராக தேர்தல் பிரசாரம் செய்வர். மோடி பிரதமராக இருப்பதாலும் அவருடைய பாதுகாப்பு கருதியும், தனி விமானத்தில் செல்கிறார்.காங்., தலைவர் ராகுல், இதுவரை, ஏர் - இந்தியா அல்லது மற்ற விமானங்களில் பயணம் செய்து வந்தார். தனி விமானம் வேண்டுமென்றால், சில நிறுவனங்களிடம் கெஞ்ச வேண்டியிருக்கும். சில சமயம் தனியார் விமானம் கிடைக்கும்; சில சமயம் கிடைக்காது. இது, காங்கிரசுக்கும், ராகுலுக்கும் பெரிய பிரச்னையாக இருந்தது.கடந்த வாரம், தன் தாய் சோனியாவுடன் கோவா சென்று ஓய்வெடுத்தார், ராகுல். பின், சத்தீஸ்கர் சென்று ஒரு விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த உடன் கோவா திரும்பினார். காலையில் ஒரு மாநிலம்; மதியம், வேறொரு மாநிலம் என சுற்றி வருகிறார், ராகுல்.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின், கட்சி தலைமைக்கும், ராகுலுக்கும் இருந்த பெரிய பிரச்னை தீர்ந்து விட்டது. இந்த மூன்று மாநில அரசும் ஒவ்வொரு தனி விமானம் வைத்துள்ளன. ராகுலோ, சோனியாவோ எங்கு போக விரும்பினாலும், இந்த மூன்று மாநிலத்திலிருந்து ஏதாவது ஒரு அரசு, சிறப்பு விமானத்தை, காங்., தலைவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.இந்த விமான செலவை யார் கொடுப்பது? 'அரசு விழாவிற்கு அழைக்கிறோம்' எனக்கூறி, செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும்' என்கின்றனர் காங்கிரசார்.'

ஸ்டெர்லைட்' திறப்பு?

'ஸ்டெர்லைட்' ஆலை திறப்பது தொடர்பான வழக்கு, தற்போது, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பையும் பிரச்னையையும் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.'இந்த வழக்கில் இதுவரை நீதிபதிகள் கூறிய கருத்துக்களை வைத்து பார்க்கும் போது, தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்பு வருமோ என, சந்தேகம் எழுகிறது' என்கின்றனர் வழக்கறிஞர்கள். 'ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை சரியில்லாததே காரணம்' என்கின்றனர், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள்.'இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன், யாருடன் கலந்தாலோசித்து அரசு முடிவெடுத்தது' என, கேள்வி எழுப்பப்படுகிறது. எப்படியும் இந்த விஷயம் உச்ச நீதிமன்றம் வரை வரும் என்பது, அனைவருக்கும் தெரியும்.இந்நிலையில், 'சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில், இந்த அரசாணையைத் தயார் செய்திருக்க வேண்டும்; ஆனால், அப்படி செய்த மாதிரி தெரியவில்லை; அவசர, அவசரமாக ஆணை வெளியிடப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் திண்டாட வேண்டியிருக்கிறது' என, வழக்கறிஞர்கள் வருத்தப்படுகின்றனர்.'சில வழக்குகளில், நீதிபதிகள் ஒரு கருத்தைத் தெரிவிப்பர்; ஆனால், தீர்ப்பு வரும்போது, முற்றிலும் அவர்கள் சொன்ன கருத்திலிருந்து மாறுபட்டிருக்கும்; ஸ்டெர்லைட் வழக்கில் அப்படி தீர்ப்பு வந்தால், அது, அதிசயம் தான்' எனவும் வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே இந்த தீர்ப்பு வரும் என, சொல்லப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    எந்த ஒரு அரசும் மக்களின் பொது எதிர்ப்பு வரும்போது அதற்க்கு தடையோ அல்லது வழக்கோ போடுகின்றோமேயானால் விவரம் அறிந்த அவர்கள் எதிர்கட்சியானாலும் எதிர்க்கட்சியினரிடமும் கலந்து ஆலோசித்து செய்தால் பின்னைடைவு வராது அதை விட்டு அவசரகதியில் செய்யும் எந்த செயலும் முரணாகத்தான் முடியும்

  • மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    தமிழக அரசை குறை சொல்ல என்ன வேண்டி இருக்கிறது. அன்றைய சூழல் அப்படி. எதிர்க்கட்சிகளும் மற்ற கட்சிகளும் உணர்ச்சிவசமாக மக்களை திருப்பாமல், அவர்களுக்கிருக்கின்ற தார்மீக அடிப்படையில் அரசிற்கு ஆலோசனைகளை வழங்கி இருக்க வேண்டும். இத்தனைக்கும் இன்றைய எதிர்க்கட்சி பல ஆண்டுகாலம் ஆளும் கட்சியாக இருந்ததால் அவர்களுக்கு சட்டம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். அவர்கள் சற்று கால அவகாசம் கொடுத்து அரசை நன்கு யோசித்து அதற்கு பிறகு அரசாணை பிறப்பிக்க ஆலோசனைகளை தந்திருக்கலாம். துப்பாக்கி சூடு சம்பவம் தவறானதால் அதனால் ஏற்பட்ட பட படைப்பாளி வந்த நிகழ்வுகள். எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், அரசு ஆலையை ஏன் மூட வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறது. அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்க ஆக்க பூர்வ உதவிகளை செய்திருக்கலாமே. ஆலை மூடவேண்டும் என்பது அரசின் நோக்கமா அல்லது மாசு கட்டுப்பாட்டை குறைத்து சிறப்பாக செயல்பட்டு ஆலை இயங்க வேண்டும் என்பது முக்கியமா?

Advertisement